உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும்!.. கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருங்க!.. விஜய் அட்வைஸ்!..
தமிழக வெற்றி கழகத்தை ட்விட்டரில் ஒரே ஒரு போஸ்ட் போட்டு தொடங்கிய நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என அவரது தொண்டர்கள் தவித்துக் கிடந்த நிலையில், வீடியோ கால் மூலமாக அனைத்து கட்சி தொண்டர்களையும் சந்தித்து இருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்திற்காக பாண்டிச்சேரியில் சூட்டிங்கில் உள்ள விஜய் ஆன்லைன் மூலமே அரசியல் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.
அதே சோஷியல் மீடியாவை வைத்தே விஜய்யையும் அவரது கட்சியையும் காலி செய்ய மற்ற கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக, பஜக ஐடி விங் ஒட்டுமொத்தமாக களமிறங்கி விஜய்யுடன் அஜித் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் சண்டை போட்டது போல போட ஆரம்பித்துள்ளனர்.
சும்மா இருந்தாலே விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக சண்டை போட்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும் கழுவி ஊற்றுவார்கள். இந்நிலையில், வம்பிழுத்தால் சும்மா விடுவார்களா? ஆனால், அது விஜய்யின் அரசியலுக்கு பாதிப்பை உண்டாக்கும் என நினைத்த அவர் விமர்சனங்கள் வந்தால் சிரித்த முகத்துடன் அதை கண்டுக் கொள்ளாமல் கடந்து செல்லுங்கள்.
இதையும் படிங்க: எதே கீழ இருந்து புல்லட் வருமா?.. சலார் பில்டப்புக்கே சவால் விடுதே சைந்தவ்!.. சிரிப்பை அடக்க முடியல
மக்களுக்கு எந்தளவுக்கு தொண்டாற்ற முடியும் என்பதை மட்டும் பாருங்கள். குக்கிராமம் வரை கட்சியை கொண்டு செல்ல வேண்டும். 80 வயதான முதியவர்களுக்கும் நம்முடைய கட்சியின் பெயரை கொண்டு போக வேண்டும் என அறிவுரை வழங்கி இருக்கிறாராம்.
கோட் படத்தை முடித்து விட்டு விரைவில் அரசியல் மாநாடு ஒன்றையும் விஜய் நடத்துவார் என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அரசியலில் தவெக தீவிரம் காட்டும் என்றும் கூறியிருக்கிறார்.