மனோஜுக்கு பம்பர் லாட்டரியால இருக்கு… கதிர் பிரச்னையை தீர்த்த அண்ணன்கள்… மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி!..
Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
ரோகிணியின் மீது ஏற்படும் சந்தேகத்தால் டிடெக்டிவ்வை வைக்க பேசுகிறார் முத்து. அவர் பெரிய தொகை கேட்க தானே செய்யலாம் என முடிவெடுக்கிறார். மீனாவை ஃபாலோ செய்யும் ஆள் வர அவரை வீட்டிற்கு சென்று பெண் கேட்க சொல்கிறார். விஜயாவின் கண் திருஷ்டி புகைப்பட விஷயத்தை வீட்டில் சொல்கிறார் மனோஜ்.
இதையும் படிங்க: கமல் நடிச்சிருக்கனும்.. பாடல் ஹிட்டாகி படம் ஓடாததற்கு இதான் காரணமா? என்ன படம் தெரியுமா?
இதற்கும் மீனாவின் மீதே பழி போடுகிறார் விஜயா. ஆனால் ஸ்ருதி நான் இதை சோஷியல் மீடியாவில் போட்டேன். அவங்க எதுவும் எடுத்து பண்ணி இருக்கலாம் என்கிறார். இதனால் விஜயா கோபப்பட்டு சென்று விடுகிறார். மனோஜுன் ஷோரூமில் விஜயாவின் படத்தை போட்டு மாலை போட்டு இருக்கிறார் ஊழியர்.
இதை பார்த்து மனோஜ் கடுப்படித்து அதை எடுக்க சொல்ல அந்த நேரத்தில் சந்தோஷி சார் கால் செய்து இன்செண்டிவ் 10 லட்சம் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். உடனே வேண்டாம் என மனோஜ் கூறிவிட ரோகிணி திட்டுகிறார். படத்தை எடுக்க சொல்லிவிட அந்த நேரத்தில் பார்க் நண்பர் வந்து வீடு விலைக்கு இருப்பதாக கூறுகிறார்.
பாக்கியலட்சுமி
கோபியை பார்க்க வந்த ராதிகா பிரச்னை செய்ததாக ஈஸ்வரி மாற்றி பேசுகிறார். இதை தொடர்ந்து கோபியை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து செல்ல ராதிகா வர நாங்கள் தான் அழைத்து செல்வோம் என ஈஸ்வரி கூறிவிடுகிறார். ஆனால் ராதிகா பிடிவாதமாக இருக்கிறார். கோபி சொன்னால் நான் போறேன் எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: Pushpa 2: கேஜிஎப் 2, பாகுபலி2, ஆர்ஆர்ஆர் ஐ தூக்கி சாப்பிட்ட புஷ்பா 2… முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடிகளா?
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
கோமதி அழுதுக்கொண்டு இருக்கிறார். பாண்டியனும் வீட்டிற்கு வர அங்கு இருக்க முடியாமல் மீண்டும் போலீஸ் நிலையம் கிளம்பி செல்கிறார். காவலர் கதிரை குற்றம் சாட்டி கொண்டு இருக்க அந்த நேரத்தில் தொலைந்த பொண்ணுடன் செந்தில் மற்றும் சரவணன் இருவரும் வந்துவிடுகின்றனர்.
தன்னை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கடத்தி சென்றதாகவும் அவர்களிடம் இருந்து தப்பி செல்லும் போது இவர்களை பார்த்து இங்கு வந்ததாக அந்த பெண் கூறுகிறார். அந்த பசங்களையும் கைது செய்து கதிரை விடுவிக்கின்றனர். பாண்டியன் சேர்ந்து கதிரை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.