தாத்தா வழியில் பேரன்… ஜேசன் எண்ட்ரிக்கு எஸ்.ஏ.சி ரியாக்ஷன் என்ன தெரியுமா? பாசம் தான்!
விஜயின் மகனும் பிரபல இயக்குனரின் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேரனுமான ஜேசன் தற்போது கோலிவுட்டில் இயக்குனராக அடியெடுத்து வைத்து இருக்கிறார். இதை தொடர்ந்து பல சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
டோக்கியோ மற்றும் லண்டனில் முறையாக திரைப்பட படிப்பை முடித்தவர் ஜேசன் சஞ்சய். சமீபத்தில் அவர் இயக்கிய குறும்படம் குறித்த தகவல்களும் இணையத்தில் கசிந்தது. ஜேசனின் முதல் படத்தினை லைகா ப்ரோடக்ஷன் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
இதை தொடர்ந்து ஜேசன் சஞ்சயிற்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி இருந்தனர். அப்பா நடிகராக இருந்தாலும், தாத்தா வழியில் அவரின் எண்ட்ரி என எஸ்.ஏ.சந்திரசேகரை மீண்டும் கோலிவுட்டில் கொண்டாட தொடங்கினர். இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரின் பதில் என்னவாக இருந்தது தெரியுமா?
எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இவர்களின் ஒரே மகன் தான் விஜய். அவர் நடிக்க வேண்டும் எனக் கேட்ட போது முதலில் சந்திரசேகர் கோபமாகி இருக்கிறார். ஆனால் விஜய் நடித்து காட்டிய அண்ணாமலை டயலாக்கே அவர் சம்மதம் சொல்ல காரணமாகி இருந்து இருக்கிறது. பின்னர் அப்போது சினிமாவில் கொடி கட்டி பறந்த விஜயகாந்தின் உதவியோடு விஜயை அறிமுகம் செய்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் காலத்திற்கு பிறகு அஜித் படத்துல தான் அத வச்சேன்! வாலி சொன்ன சீக்ரெட்
எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் புரட்சி படங்களை எடுத்து பிரபலமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்தை மட்டுமே வைத்து 17 படங்களை இயக்கி இருக்கிறார். அவருக்கு புரட்சி பட்டம் வந்ததற்கும் காரணமாகி இருக்கிறார். தற்போது மகன் செய்யாததை பேரன் செய்து இருக்கிறார்.
இந்த தகவலை கேட்ட போதே எஸ்.ஏ.சிக்கு மனம் நெகிழ்ந்ததாம். தாத்தா வழியில் என சொன்னபோது அத்தனை சந்தோஷமாக இருந்தது. அவர் தன்னுடைய முதல் படத்தில் விஜய் சேதுபதியை தான் இயக்க விரும்பினார். பல படம் செய்து இயக்குனராக நிரூபித்த பின்னரே தந்தையிடம் வாய்ப்பு கேட்பேன் என்றும் சந்திரசேகர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.