தேவையில்லாம பிரச்னை வேண்டாம்… அடக்கி வாசிங்க.. விஜய் சொன்ன கண்டிஷன்!
விஜய் படத்தின் ஆடியோ ரிலீஸே மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கும். அதிலும் அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும் அனைத்து விஷயங்களுமே இன்று வரை வைரல் கண்டெண்ட்டாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் லியோ ஆடியோ ரிலீஸுக்கு முன்னரே விஜய் ஒரு பொது மேடையில் எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
வாரிசு படத்தின் நிகழ்ச்சியில் சரத்குமார் விஜய் தான் சூப்பர்ஸ்டார் எனக் கொழுத்தி விட்ட தீக்கு பதிலடியாக ஹுக்கும் பாடல் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. தொடர்ச்சியாக ரஜினிகாந்தும் தன்னுடைய ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் காக்கா, கழுகு கதை சொல்லினார். பலரும் அந்த காக்கா விஜய் தான் என நக்கலடித்தனர்.
இதையும் படிங்க : த்ரிஷாவோட அந்த இடத்துல அவரு கை வைச்சாரு!.. சும்மாதான் இருந்தாங்க!. நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!..
இதனால் எப்படியும் விஜயின் குட்டி கதை மூலம் பதிலடி வரும் என லியோ ஆடியோ ரிலீஸ் மீது ஆவலாக இருந்து வருகின்றனர். ஆனால் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தவே படக்குழு அல்லோலப்பட்டனர். இங்கு அங்க என மாறி தற்போது சென்னையிலே நேரு அரங்கத்தில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஜவான் படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. அட்லீயின் ஆஸ்தான ஹீரோவான விஜய் இல்லாமல் எப்படி? அவரும் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்து கொள்ள இருக்கிறார். அப்போது ரஜினிக்கு பதிலடி கொடுக்கும்படி எதுவும் பேசலாம் என்ற கிசுகிசுக்கள் இணையத்தில் கசிந்தது.
இதையும் படிங்க : எனக்கு இனி வேணாம்… ஈகோலாம் இல்லை… லாரன்ஸை மாற்றிய விஜய் வார்த்தை!
ஆனால் சமீபத்தில் நடந்த ஐடி விங் மீட்டிங்கில் எந்த நடிகரை பற்றியும் இனி தரக்குறைவாக விமர்சிக்க கூடாது. இந்த கண்டிஷனை கறாராக ஃபாலோ செய்ய வேண்டும் என விஜய் சொல்லி இருக்கிறார். எதுவும் பேசி அது விஜயின் அரசியல் எண்ட்ரியை பாதிக்கலாம் என்பதற்கே இந்த முன் ஏற்பாடு எனக் கூறப்படுகிறது.