மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி… ரோகிணி மீது வலுக்கும் சந்தேகம்… செந்தில் எடுத்த திடீர் முடிவு!..

by Akhilan |
vijay serial
X

vijay serial

VijayTV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் இன்றைய எபிசோட்களின் தொகுப்புகள்

சிறகடிக்க ஆசை

பார்வதி சொன்ன விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இருவருக்கும் சந்தேகம் வருகிறது. காலையில் மீனா மற்றும் ஸ்ருதி இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது ரோகிணி வர அவருக்கு நன்றி சொல்கிறார் மீனா. ஷாக்காகும் ரோகிணி பிரச்னை முடியதான் காசை கொடுத்ததாக சொல்கிறார்.

இதையும் படிங்க: திரிஷா என் தோழிலாம் இல்லை… பேட்டியில் அடாவடியாக பேசிய நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

இதைக் கேட்கும் ஸ்ருதி இவங்க இவ்வளோ நல்லவங்க இல்லையே என்கிறார். இதே சந்தேகம் தான் முத்துவுக்கும் வந்து இருக்கிறது என்கிறார் மீனா. பின்னர் மனோஜ் ஷோரூமுக்கு திருஷ்டி படம் விற்பனை செய்து வருகிறார் ஒருவர். விஜயாவின் மாவு கொட்டும் படம் என்பதால் அதை பார்த்து ஷாக்காகும் மனோஜ் மொத்த படத்தையும் வாங்கி கொள்கிறார்.

பாக்கியலட்சுமி

வீட்டில் ஈஸ்வரியுடன் பாக்கியா பேசிக்கொண்டு இருக்கிறார். செல்வி பாக்கியாவை கோபி சாரோட கோர்த்து விட்ருவாங்களானு பயமா இருக்கா எனக் கலாய்க்கிறார். ராதிகா கோபியை பார்க்க வருகிறார். என்ன அவ்வளோ பிஸியா இருந்தியா? பாக்கியா என்ன ஹாஸ்பிடலில் சேர்த்தா? எங்க அம்மா இங்கையே இருந்து இருக்காங்க.

ஆனா நீ என்னை பார்க்கவே வரலை என்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்துவிட நீ இதற்கு இங்கு வந்தாய் என்கிறார். இவர் நான் வரவே இல்லை என கோபப்படுகிறார் நீங்கள் தானே என்ன விடல என ராதிகா கேட்கிறார். வீட்டில் இருக்கும் ஈஸ்வரி செழியனிடம் கோபியின் சர்ஜரி பணம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்பாவிற்கு இன்சூரன்ஸ் வந்துவிட்டது.

மீதம் இருக்கும் பணத்தில் கொஞ்சம் தான் கட்ட வேண்டும் அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். இதை கேட்கும் ஜெனி ஆண்ட்டி பிரச்சனையில் நீ அவங்களுக்கு உதவி செய்யல. இப்ப மட்டும் செய்கிற என்கிறார். ஈஸ்வரி கோபியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு தான் அழைத்து வருவேன் என கூற பாக்கியா நான் சம்மதிக்க மாட்டேன் என இருவரும் கோபப்பட்டுக் கொள்கின்றனர்.

இதையும் படிங்க: பாக்கியராஜோட அந்த மெகா ஹிட் படத்துக்கு இன்ஸ்பிரேஷன் யாருன்னு தெரியுமா? அடடே அவரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

சக்திவேல் மற்றும் குமார் சேர்ந்து கதிர் குறித்து தப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். பாண்டியன் அவர்களிடம் சண்டைக்கு போய்க் கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வரும் தங்கமயில் அப்பா அம்மா எல்லோரையும் ஆறுதல் படுத்தி அமைதியாக இருக்கக் கூறுகின்றனர். போலீஸ் நிலையம் வரும் சக்திவேல் ஓவராக பேச சரவணன் சத்தம் போடுகிறார்.

vijay serial

vijay serial

செந்திலை தனியாக அழைக்கும் கதிர் இவங்க என்னை அடிக்கதான் செய்றாங்க. ஆனா பெண்ணை கண்டுபிடிக்க டிரை பண்ண மாட்றாங்க எனக் கூறுகிறார். பாண்டியனை சமாதானம் செய்யும் பழனி வெளியில் அழைத்து செல்கிறார். அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு சரவணன் மற்றும் செந்தில் பெண்ணை கண்டுபிடிக்க தயாராகின்றனர்.

Next Story