மேக்கப் டெஸ்ட் எடுத்தும் நடிக்காமல் போன விஜயகாந்த்!... அவமானத்தில் நொந்துபோன கேப்டன்!..
விஜயகாந்த் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடினார். ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்தால் ஜாலியாக நடிக்கலாம் என்று நினைத்தாராம். அதன்பிறகு அவருக்கு நேர்ந்த அவமானங்கள் பல. அதையும் தாண்டி அவர் சாதிக்க வேண்டும் என்று ஒரு வெறியுடன் இருந்து சாதித்துக் காட்டினார். இதுகுறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கேட்கையில், விஜயகாந்த் அளித்த பதில்களைப் பார்ப்போம்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விஜயகாந்த் இப்படி கேட்டுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு என்னை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர், சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடிக்க முதலில் ரஜினிகாந்தைத் தான் கேட்டேன். அப்போது அவரால் நடிக்க முடியாத சூழ்நிலை.
அதன்பிறகு புதுமுகம் ஒன்றை தேட ஆரம்பித்தேன். படத்திற்குப் பொருத்தமாக முரட்டு சுபாவத்துடன் கூடிய நபராக இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் என் கண்ணில் பட்டீர்கள். அப்படித் தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன் என்றார்.
விஜயகாந்திடம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டார். நீங்கள் மதுரையில் இருந்து வந்ததே படத்தில் நடிப்பதற்குத் தானா என்று கேட்டார். சினிமாவில் நடிக்க அழைத்துச் சென்றார்கள். நானும் ஜாலியாக இருக்கலாம் என்று நடிக்க வந்தேன். என் கேள்விக்கு என்ன பதில் என்ற படத்திற்கு மேக் அப் டெஸ்ட் எடுத்தார்கள். ஒருநாள் நடிக்க வைத்தார்கள். பிறகு என்னை அந்தப் படத்தில் இருந்து கேன்சல் செய்து விட்டார்கள். அது எனக்குப் பெரிய அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு எப்படியும் நடித்து ஜெயிக்க வேண்டும் என்று வெறி வந்தது என்றார் விஜயகாந்த்.
ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்வி படங்கள் வந்தபோது இது நமக்குத் தேவையில்லாத வேலை என்று நினைத்தாராம் விஜயகாந்த். அப்போது அவருடன் இருந்தவர்களும் மதுரைக்கே போய்விடு என்றார்களாம். அப்போது கிடைத்த வாய்ப்பு தான் சட்டம் ஒரு இருட்டறை. அதன்மூலம் எனக்கு மீண்டும் வாழ்க்கையில் புது ஒளி கிடைத்தது என்றார் கேப்டன் விஜயகாந்த்.