33 முறை விஜயகாந்துடன் மோதிய பிரபு படங்கள்!.. அதிகமுறை ஜெயித்தது இளைய திலகமா? புரட்சிக்கலைஞரா?..

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், இளையதிலகம் பிரபு படங்கள் என்றாலே தாய்மார்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். இருவரது படங்களும் மோதிக்கொண்டால் அந்த மோதல் எப்படி இருக்கும்? பார்ப்போம் அதையும்...! 1984ல் விஜயகாந்த்துக்கு நல்ல நாள், பிரபுவுக்கு கைராசிக்காரன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்த்தோட வைதேகி காத்திருந்தாள், பிரபுவோட வம்ச விளக்கு ரிலீஸ். இதுல விஜயகாந்த் வின்னர். 1985ல் விஜயகாந்த் ராமன் ஸ்ரீராமன், பிரபுவின் நீதியின் நிழல் ரிலீஸ். ரெண்டுமே பிளாப். அதே ஆண்டில் விஜயகாந்தின் புதிய […]

By :  sankaran v
Update: 2024-04-04 07:08 GMT

Prabhu, Vijayakanth

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், இளையதிலகம் பிரபு படங்கள் என்றாலே தாய்மார்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். இருவரது படங்களும் மோதிக்கொண்டால் அந்த மோதல் எப்படி இருக்கும்? பார்ப்போம் அதையும்...!

1984ல் விஜயகாந்த்துக்கு நல்ல நாள், பிரபுவுக்கு கைராசிக்காரன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்த்தோட வைதேகி காத்திருந்தாள், பிரபுவோட வம்ச விளக்கு ரிலீஸ். இதுல விஜயகாந்த் வின்னர். 1985ல் விஜயகாந்த் ராமன் ஸ்ரீராமன், பிரபுவின் நீதியின் நிழல் ரிலீஸ். ரெண்டுமே பிளாப். அதே ஆண்டில் விஜயகாந்தின் புதிய சகாப்தம், பிரபுவின் நேர்மை ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

1986ல் விஜயகாந்த் கரிமேடு கருவாயன், பிரபுவின் சாதனை ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்த் தர்ம தேவதை, தழுவாத கைகள், பிரபுவுக்கு பாலைவன ரோஜாக்கள், அறுவடை நாள் படங்கள் ரிலீஸ். நாலுமே வெற்றி. இருவரும் வின்னர். 1987ல் விஜயகாந்துக்கு வேலுண்டு வினையில்லை, பிரபுவுக்கு மேகம் கறுத்திருக்கு ரிலீஸ். ரெண்டுமே சுமார் ரகம் தான்.

அதே ஆண்டில் விஜயகாந்த் வீரபாண்டியன், பிரபுவுக்கு சின்னப்பூவே மெல்லப்பேசு ரிலீஸ். இதுல பிரபு வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்த் சட்டம் ஒரு விளையாட்டு, உழவன் மகன் சூப்பர்ஹிட். பிரபு வருங்காலத் தூண்கள் பிளாப். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

1988ல் விஜயகாந்த் உள்ளத்தில் நல்ல உள்ளம், பிரபுவுக்கு அக்னி நட்சத்திரம், குரு சிஷ்யன் ரிலீஸ். இதுல பிரபு தான் வின்னர். 2 படங்களும் வெள்ளி விழா. அதே ஆண்டில் விஜயகாந்துக்கு தம்பி தங்க கம்பி, பிரபுவுக்கு என் தங்கச்சி படிச்சவ ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி. அதே ஆண்டில் விஜயகாந்த்தின் செந்தூரப்பூவே, பிரபுவுக்கு தர்மத்தின் தலைவன் ரிலீஸ். இதுல இருவருக்கும் வெற்றி என்றாலும் விஜயகாந்த் தான் வின்னர்.

1988ல் விஜயகாந்துக்கு உழைத்து வாழ வேண்டும், பிரபுவுக்கு கலியுகம், பூவிழி ராஜா ரிலீஸ். ரெண்டுமே பிளாப். 1989ல் விஜயகாந்த்துக்கு தர்மம் வெல்லும், ராஜநடை ரிலீஸ். கமல், பிரபுவுக்கு வெற்றி விழா ரிலீஸ். ரெண்டுமே வெற்றி. அதே ஆண்டில் விஜயகாந்துக்கு மீனாட்சி திருவிளையாடல், பிரபுவுக்கு வெற்றி மேல் வெற்றி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

1990 விஜயகாந்துக்கு புலன்விசாரணை, பிரபுவுக்கு காவலுக்குக் கெட்டிக்காரன், நல்ல காலம் பொறந்தாச்சு ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1991ல் விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன், பிரபுவுக்கு சின்னத்தம்பி படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி.

Managarakaval

அதே ஆண்டில் விஜயகாந்துக்கு மாநகர காவல், பிரபுவுக்கு ஆயுள் கைதி படம் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். 1991ல் விஜயகாந்துக்கு மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், பிரபுவுக்கு தாலாட்டு கேட்குதம்மா படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டுமே வெற்றி. 1992ல் விஜயகாந்துக்கு சின்னக்கவுண்டர், பிரபுவுக்கு பாண்டித்துரை படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

அதே ஆண்டில் விஜயகாந்துக்கு காவியத்தலைவன், பிரபுவுக்கு செந்தமிழ்ப்பாட்டு ரிலீஸ். இதுல பிரபு தான் வின்னர். 1993ல் விஜயகாந்துக்கு கோயில் காளை, பிரபுவுக்கு சின்ன மாப்ளே படங்கள் ரிலீஸ். ரெண்டுமே சுமார் ரகம் தான். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு எங்க முதலாளி, பிரபுவுக்கு உழவன் படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் ரகம்.

1994ல் விஜயகாந்துக்கு சேதுபதி ஐபிஎஸ், பிரபுவுக்கு ராஜகுமாரன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்தின் பெரிய மருது, பிரபுவுக்கு ஜல்லிக்கட்டு காளை படங்கள் ரிலீஸ். 1995ல் விஜயகாந்தின் கருப்பு நிலா, பிரபுவுக்கு கட்டுமரக்காரன் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

Chinnathambi

1995ல் விஜயகாந்தின் திருமூர்த்தி, பிரபுவுக்கு சின்ன வாத்தியார் ரிலீஸ். இதுல ரெண்டு பேரும் வின்னர். 1997ல் விஜயகாந்தின் தாயகம், பிரபுவுக்கு பரம்பரை படங்கள் ரிலீஸ். இதுல பிரபு தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்தின் அலெக்சாண்டர், பிரபுவுக்கு பாஞ்சாலங்குறிச்சி ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

1997ல் விஜயகாந்துக்கு தர்மசக்கரம், பிரபுவுக்கு பெரிய தம்பி படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் ரகம். 1998ல் விஜயகாந்துக்கு உளவுத்துறை, பிரபுவுக்கு பொன்மனம் படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் விஜயகாந்துக்கு வீரம் வெளஞ்ச மண்ணு படமும், பிரபுவுக்கு என் உயிர் நீதானே படமும் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

2000த்திர் விஜயகாந்தின் வானத்தைப் போல, பிரபுவுக்கு திருநெல்வேலி படங்கள் ரிலீஸ். இதுல விஜயகாந்த் தான் வின்னர்.

Tags:    

Similar News