எல்லாமே உண்மைதான் - பிக்பாஸ் போனதுக்கு காரணமே இதுதானா? வெளிச்சத்துக்கு வந்த விக்ரமனின் உண்மை முகம்
சமீபகாலமாக இணையத்தில் கொழுந்து விட்டு எரிவது பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மற்றும் கிருபா இவர்களின் பிரச்சினைதான். ஆரம்பத்தில் விக்ரமன் மீது கிருபா ஏகப்பட்ட புகார்களை கொடுத்து வந்த நிலையில் கூடவே அதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார். ஏதோ ஒரு விழாவில் பார்த்து பழகிய இவர்கள் இருவரும் நாளடைவில் நண்பர்களாக அதன் பின் காதலர்களாக மாறியுள்ளனர்.
ஒரு சமயத்தில் பிஸிக்கல் ரிலேஷன்சிப்பிலும் கொஞ்ச நாள்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விக்ரமனுக்காக விலையுயர்ந்த ஆப்பிள் போன், வாட்ச் , கார் என ஏகப்பட்ட சொகுசு பொருள்களை கிருபா வாங்கியும் கொடுத்துள்ளார். அதற்காக விக்ரமன் பணம் எதுவும் கொடுக்கவில்லையாம். அதன் இ.எம்.ஐ கூட கிருபாதான் கட்டிக் கொண்டு வருகிறாராம்.
இதனால் மனமுடைந்த கிருபா விக்ரமன் தன்னை பண மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விக்ரமன் சில குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். அதாவது கிருபாவை நான் திருமணம் செய்யவேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் செய்கிறார் என்று விக்ரமன் கூறுகிறார். ஆனால் என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற முடிவில் விக்ரமன் இருக்கிறார்.
அதற்கான காரணம் விக்ரமன் எப்பொழுதுமே அரசியல் சார்ந்த சிந்தனையிலேயே இருப்பதாகவும் அதை விட்டு விட்டு கிருபா அவருடன் வர சொல்லுவதாகவும் தெரிகிறது. ஆனால் விக்ரமன் அரசியலை விட்டு வரமுடியாது என்று இருக்கிறாராம். இதனால் தான் இருவருக்குள்ளும் பிரச்சினையே வந்திருக்கின்றது. இந்த ஒரு காரணத்திற்காகவே விக்ரமன் கிருபாவை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறாராம்.
மேலும் விக்ரமனுக்காக கிருபா வாங்கிக் கொடுத்த அத்தனை பொருள்களுக்கும் உள்ள செலவுகள் அனைத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்து அவர் கொடுத்து விட்டதாகவும் கூறுகிறார். மொத்த 12 லட்சம் மதிப்புள்ள அந்த பொருள்களுக்கான அனைத்து பணத்தையும் 3 தவணையாக 4 லட்சம் 4லட்சமாக கொடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார் விக்ரமன். அதற்கான ஆதாரமும் தன்னிடம் இருக்கிறது என சொல்லியிருக்கிறார்.
மேலும் கிருபா அவருக்கு அந்த விலையுயர்ந்த பொருள்கள் கொடுத்தது உண்மைதான் என்றும் இருவரும் சில நாள்கள் ஒன்றாக இருந்தோம் என்றும் விக்ரமன் கூறியிருக்கிறார். ஆனால் அரசியலில் தன் பெயரை கெடுப்பதற்காகவே கிருபா இப்படியெல்லாம் செய்கிறார் என்றும் அவரை திருமணம் செய்ய மாட்டேன் என்றும் விக்ரமன் கூறியிருக்கிறார்.