ட்ராபிக்கில் பாண்டியராஜன் செய்த வேலை! அதையே திரும்ப செய்த விமல்… இதெல்லாம் ஒரு ஆசையாப்பா?...
அறிமுகமான முதல் படத்திலேயே அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன். பாண்டியராஜன் இயக்கிய முதல் திரைப்படம் ஆண்பாவம். ஆண்பாவம் திரைப்படத்தில் அவரும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார்.
அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாண்டியராஜனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆண்பாவம் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரமாகதான் அவர் அறிமுகமானார். எனவே பிறகு தொடர்ந்து காமெடி கதாநாயகனாகவே அவர் நடிக்க துவங்கினார்.
தற்சமயம் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் பாண்டியராஜன். விமல் நடிக்கும் தெய்வ மச்சான் திரைப்படத்தில் அவருக்கு தந்தையாக பாண்டியராஜன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் குறித்து விமல் பேசும்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார்.
விமல் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சென்னையில் சின்ன சின்ன நிறுவனங்களில் பணிப்புரிந்து வந்தார். அந்த சமயத்தில் ஒருமுறை அவர் சாலையில் ட்ராப்பிக்கில் நின்று கொண்டிருந்தபோது அங்கு பாண்டியராஜன் தனது காரில் சென்றுக்கொண்டிருந்தார்.
படப்பிடிப்பிற்கு வேகமாக சென்று கொண்டிருந்த பாண்டியராஜன் போகும் வழியிலேயே அவர் காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரை பார்த்தபோது தானும் அந்த மாதிரி நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் விமல்.
இதுக்குறித்து விமல் கூறும்போது “பாண்டியராஜன் மாதிரி நானும் இப்போது நடிகனாகிவிட்டேன். அவரை போலவே காரில் போகும்போதே உணவும் சாப்பிட்டுள்ளேன். எனவே எனது ஆசை நிறைவேறியது” என நகைச்சுவையாக கூறியுள்ளார். ஆனால் இன்னும் பாண்டியராஜன் தொட்ட உயரங்களை விமல் தொடவில்லை என்றே கூற வேண்டும்.