நெய்வேலியில் விஜய் செல்பி!... அட இதுக்கு பின்னாடி இப்படி ஒரு ஆச்சரிய காரணம் இருக்கா?

Vijay: நடிகர் விஜய் வேன் மீது ஏறி எடுத்த நெய்வேலி செல்ஃபி ரசிகர்களிடம் பெரிய அளவில் லைக்ஸை குவித்தது. அந்த க்ளிக்கிற்கு பின்னால் ஒரு ஆச்சரிய காரணமே இருக்கிறதாம். சில வருடங்கள் முன்னர் விஜய் ஒரு வேன் மீது ஏறி ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த வருடம் அதிக லைக்ஸ் குவித்த படமாகவும் இருந்தது. இந்நிலையில் அந்த க்ளிக்கின் பின்னால் என்ன நடந்தது என பிரபல திரை விமர்சகர் செய்யாறு ரவி […]

By :  Akhilan
Update: 2024-03-14 08:25 GMT

Vijay: நடிகர் விஜய் வேன் மீது ஏறி எடுத்த நெய்வேலி செல்ஃபி ரசிகர்களிடம் பெரிய அளவில் லைக்ஸை குவித்தது. அந்த க்ளிக்கிற்கு பின்னால் ஒரு ஆச்சரிய காரணமே இருக்கிறதாம்.

சில வருடங்கள் முன்னர் விஜய் ஒரு வேன் மீது ஏறி ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. அந்த வருடம் அதிக லைக்ஸ் குவித்த படமாகவும் இருந்தது. இந்நிலையில் அந்த க்ளிக்கின் பின்னால் என்ன நடந்தது என பிரபல திரை விமர்சகர் செய்யாறு ரவி தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் நெய்வேலியில் விஜய் இருந்தார். அப்போது அவர் பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தினர். அவர்கள் விஜயின் சம்பள விவரங்களை கைப்பற்றியதாம். உடனே நேரடியாக அதிகாரிகள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தனர். ஆனால் அப்போது ஐ.எஸ்.எஃப் படை வீரர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் உள்ளே நுழைய அதிகாரிகளுக்கு அனுமதி தரவில்லையாம்.

பின்னர் அனுமதி பெற்று உள்ளே சென்ற அதிகாரிகள் விஜயை விசாரித்து இருக்கின்றனர். எல்லாம் முடிந்தும் கிளம்புவார்கள் எனப் பார்த்தால் விஜயை சென்னை வரக்கூறி இருக்கின்றனர். அவர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வருவதாக கூற அதெல்லாம் முடியாது. இப்போதே எங்கள் காரிலே வாருங்கள் எனக் கூறி கறார் காட்டினார்களாம்.

இதையும் படிங்க: போட்றா வெடியா! ரிலீசான அஜித்- ஆதிக் படத்தின் டைட்டில்… என்னங்க இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க?

அதன் பின்னர், அதிகாரிகள் காரில் விஜயை சென்னைக்கு அழைத்து வந்தனராம். அவர் நெய்வேலியில் இருந்ததால் பிரச்னை பெரிதாக மாறி அப்போது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

Tags:    

Similar News