பாடல் வரிகளை கேட்டு கண்ணதாசனின் காலில் விழுந்த விசு!.. நடந்தது இதுதான்!..

by சிவா |
kannadasan
X

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளை, சிக்கல்களை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்களை இயக்கி நடித்தவர் விசு. நாடகங்களில் இருந்து இவர் சினிமாவுக்கு வந்ததாலோ என்னவோ ஒரு வீட்டிற்குள்ளேயே பல காட்சிகளை வைத்திருப்பார் விசு. சம்சாரம் அது மின்சாரம் படத்தை பார்த்த எல்லோருக்கும் அது தெரியும்.

அதேபோல் குழப்பியடிப்பது போலவும், எதிரே இருப்பவரை மடக்குவது போலவும் விசு பேசும் வசனங்களும் மிகவும் பிரபலம். விசு படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். விசு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்த திரைப்படம் குடும்பம் ஒரு கதம்பம். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜியை கோபப்படுத்திய கண்ணதாசன் பாட்டு!.. நடந்தது இதுதான்!..

1981ம் வருடம் வெளியான இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். ஆனாலும், அப்படத்திற்கான பல பணிகளை விசுவே செய்தார். அப்போது இப்படத்திற்கான ஒரு பாடலை வாங்குவதற்காக எம்.எஸ்.வி-யிடம் சென்றார் விசு. அங்கு கவிஞர் கண்ணதாசனும் இருந்தார். பாடலை எழுவதற்கான சூழ்நிலையை விவரித்த விசு முழுக்கதையையும் சொல்ல துவங்கியிருக்கிறார்.

விசு சொல்லிக்கொண்டே இருக்கவே ஒரு கட்டத்தில் கவனம் திசைமாறிய கண்ணதாசன் எம்.எஸ்.வியின் தொடையை கிள்ளி விளையாட துவங்கிவிட்டாராம். இதைப்பார்த்து விசுவுக்கு கோபம் வந்தது. நாம் கதையை இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர் இப்படி விளையாடி கொண்டிருக்கிறாரே!.. நாம் நினைப்பது போல் பாடல் வரிகள் அமையுமா? என்கிற சந்தேகத்தோடே கதையை சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: 3 நாளாகியும் பாட்டு வரல.. திட்டிய தயாரிப்பாளர்!.. கோபத்தில் கண்ணதாசன் சொன்ன வரிகள்!..

80களில் ஒரு குடியிருப்பில் பல வீடுகள் இருக்கும். அதில் 5 அல்லது 6 வீடுகள் இருக்கும். அப்படத்திற்கும் அதுதான் கதைக்களம். அந்த வீட்டில் வசிக்கும் விசு எந்த வேலைக்கு செல்லாமல் உலக விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார். கஷ்டமான சூழ்நிலையில் குடும்பம் இருந்தாலும் தனது மனைவி வேலைக்கு போகக்கூடாது என எஸ்.வி.சேகர் நினைப்பார்.. பிரதாப் போத்தனும், அவரின் மனைவியும் வேலைக்கு போவார்கள். அதனால் குழந்தையை பார்த்து கொள்ளமுடியாமல் ஒரு இடத்தில் விட்டிருப்பார்கள்.. இப்படி பல சிக்கலை அப்படம் பேசும்.

விசு கதையை சொல்லி முடித்ததும் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என வரிகளை சொல்ல துவங்கிய கண்ணதாசன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்றதுபோல வரிகளை வரிசையாக சொல்ல ‘நான் இவ்வளவு நேரம் சொன்ன கதையை உங்கள் பாடல் வரிகள் அழகாக அப்படியே சொல்லிவிட்டது’ என சொல்லிவிட்டு கண்ணதாசனின் காலில் விசு விழுந்துவிட்டாராம்.

கண்ணதாசன் சொன்ன பல்லவியான ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்பதையே அப்படத்திற்கு தலைப்பாகவும் வைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை கண்டபடி திட்டிய கண்ணதாசன்.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…

Next Story