எனக்கு நான்தான் போட்டி!.. அஜித் இருக்கும்போது விஜய் இப்படி சொல்வது சரியா?..

திரைத்துறையில் குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது எப்போதும் இருக்கும். கருப்பு வெள்ளை காலத்திலிருந்து இது இருக்கிறது. எம்,ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் -, விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு என இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எதிர்காலத்திலும் இது இருக்கும். வெளியே நாங்களெல்லாம் நண்பர்கள்தான் என காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் போட்டியும், பொறாமையும் எப்போதும் இருக்கும். ஆனால், சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பார்கள். ஒருபக்கம் இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் […]

Update: 2022-12-28 03:36 GMT

vijay

திரைத்துறையில் குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது எப்போதும் இருக்கும். கருப்பு வெள்ளை காலத்திலிருந்து இது இருக்கிறது. எம்,ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் -, விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு என இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எதிர்காலத்திலும் இது இருக்கும்.

வெளியே நாங்களெல்லாம் நண்பர்கள்தான் என காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் போட்டியும், பொறாமையும் எப்போதும் இருக்கும். ஆனால், சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பார்கள். ஒருபக்கம் இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசி டிரெண்ட்டிங் செய்து வருவார்கள். பல வருடங்களாக இது தொடர்ந்து நடந்து வருகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்!. தற்போது இரு நடிகர்களுக்கு இடையே பெரும் போட்டி எனில் அது விஜய் - அஜித் என்பதுதான். பல வருடங்கள் கழித்து இருவரின் திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. அஜித்தின் துணிவும், விஜயின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எனவே, எந்த படம் ஓடும்? அல்லது இரண்டு படங்களும் ரசிகர்களை கவருமா என்பதெல்லாம் இரண்டு படங்களும் ரிலீஸான பின்பே தெரியவரும்.

சமீபத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ‘1990ல் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக இருந்தார். அவரது வெற்றியை பார்த்து நானும் வேகமாக ஓட வேண்டியிருந்தது. அவரை விட நான் அதிக வெற்றி பெற வேண்டும் என ஆசைப்பட்டேன். அவரின் பெயர் ஜோசப் விஜய். அப்படி ஒரு போட்டி எல்லோருக்கும் தேவை. உங்களுடன் நீங்களே போட்டி போடுங்கள்’ எனப் பேசினார். அதாவது எனக்கு நான்தான் போட்டி. வேறு யாரும் போட்டியில்லை என்பதைத்தான் விஜய் வேறு மாதிரி பேசியிருக்கிறார்.

விஜய்க்கு போட்டியாக அஜித் இருப்பது உண்மை. இது விஜய்க்கும் தெரியும். விஜயின் படங்களுக்கு இணையாகவே அஜித்தின் படங்களும் வசூலை பெற்று வருகிறது. அந்த தைரியத்தில்தான் துணிந்து ‘வாரிசு’ படத்துடன் தனது ‘துணிவு’ படம் வெளியாக வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, ‘விஜய் ரசிகர்களை அரவணைக்கிறார். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடது என விழாக்களில் பேசுகிறார். ஆடியோ விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார், அவர்களுடன் செல்பி எடுத்து டிவிட்டரில் பதிவிடுகிறார், அதோடு அவரின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை அவ்வப்போது சந்தித்து பேசுகிறார்.. அவர்களுக்கு பிரியாணி போடுகிறார். நண்பா நண்பி என செண்டிமெண்ட் காட்டுகிறார்.

ajith vijay

ஆனால், இது எதையுமே அஜித் செய்வதில்லை. ரசிகர்களை அவர் பொருட்டாகவே நினைப்பதில்லை. தான் நடிக்கும் சினிமா தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ரசிகர்களை சந்திப்பதில்லை. உங்கள் வேலைய பாருங்கள். எனக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்கிறார். குறிப்பாக ரசிகர்களை எப்போதும் தள்ளியே வைத்திருக்கிறார். அவருக்கு ரசிகர் மன்றம் கூட இல்லை. அவற்றையெல்லாம் கலைத்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.

அஜித் இப்படி இருந்தும், விஜய்க்கு நிகராக அவருக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது. தல தல என உருகிறார்கள். அவரின் படங்கள் வெளியானால் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள். அதோடு, அஜித்தின் திரைப்படங்கள் விஜய் படங்களுக்கு இணையாகவே வசூலை பெறுகிறது. எனவே, கண்டிப்பாக விஜய்க்கு போட்டியாக இருப்பது அஜித் மட்டுமே. இப்படி இருக்கும்போது ‘எனக்கு போட்டி நான்தான்’ என்கிற ரீதியில் விஜய் பேசியிருப்பது அபத்தம், உச்சக்கட்ட காமெடி என சினிமா பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வெறியேத்துறதே வேலையா போச்சு!. சைனிங் உடம்பை காட்டு சூடேத்தும் கெட்டிகா சர்மா..

Tags:    

Similar News