ரசிகர்கள் மீது வெறுப்பை கொட்டும் அஜித்!... ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? பிரபலம் சொல்லும் சம்பவம்!...
Ajithkumar: தமிழ் சினிமாவில் பெரும்பாலான நட்சத்திரங்கள் அடிக்கடி தங்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி தங்கள் நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்து கொள்வார்கள். ஆனால் இதில் ரொம்பவே வித்தியாசப்பட்டவர் அஜித்குமார். இவர் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசும் போது, அஜித் ரொம்பவே நல்ல மனிதர். அதில் சந்தேகமே இல்ல. தன்னிடம் வேலை செய்த 13 பேருக்கு வீடு கட்டி கொடுத்தார். அவர்கள் தன் வீட்டுக்கு வந்து போக கார் கொடுத்து இருக்கிறார். அவர்கள் பிள்ளைகள் படிப்பு செலவை […]
Ajithkumar: தமிழ் சினிமாவில் பெரும்பாலான நட்சத்திரங்கள் அடிக்கடி தங்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி தங்கள் நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்து கொள்வார்கள். ஆனால் இதில் ரொம்பவே வித்தியாசப்பட்டவர் அஜித்குமார்.
இவர் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசும் போது, அஜித் ரொம்பவே நல்ல மனிதர். அதில் சந்தேகமே இல்ல. தன்னிடம் வேலை செய்த 13 பேருக்கு வீடு கட்டி கொடுத்தார். அவர்கள் தன் வீட்டுக்கு வந்து போக கார் கொடுத்து இருக்கிறார். அவர்கள் பிள்ளைகள் படிப்பு செலவை பார்க்கிறார்.
இதையும் படிங்க: பைத்தியமா இந்த பையன்?!.. டி.எம்.எஸ்சை கலாய்த்த நபர்.. வரிஞ்சி கட்டிகொண்டு வந்த பி.யூ.சின்னப்பா…
மருத்துவம் உள்ளிட்ட பெரிய படிப்பை படிக்க விரும்பினால் 80 மதிப்பெண் எடுத்தவர்களாக இருந்தால் அதற்கும் அவர் செலவு செய்கிறார். நடிகர் சங்கத்துக்கு பெரிய தொகையை கொடுத்த நடிகர்களில் அவரும் ஒருவர். தேர்தலில் ஓட்டு போட வரும் போது என்னைக்குமே நான் நடிகர் என்று முன்னாடி போகவே மாட்டார். வரிசையில் நின்று தன் முறை வந்த பின்னரே ஓட்டு போட செல்வார். அத்தனை எளிமையான மனிதர்.
துணிச்சலான நடிகரும் அஜித் தான். அவருக்கு குடும்பம் என்றால் அவ்வளோ பிடிக்கும். தன்னுடைய ரசிகர்கள் தனக்கு பால் அபிஷேகம் செய்வது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு எதுவும் செலவு செய்யக்கூடாது. உங்க பெற்றோர்களுக்கு செய்யுங்கள் என பகிரங்கமாக அறிவித்தார்.
இதையும் படிங்க: விலை போகாத லால் சலாம்!.. சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!.. கை கொடுத்த கலாநிதி மாறன்…
இப்படி மீடியாக்களிடம், ரசிகர்களிடம் இருந்து அஜித் தள்ளி இருப்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அஞ்சலி செலுத்த வரவே இல்லை. விஜயகாந்த் இறப்பை கண்டுக்கவே இல்ல. எதற்காக இப்படி அஜித் விலகி போகிறார். இது சரியாக இல்ல என்றும் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.