பிரமாண்ட படம் தோல்விக்கு அவங்கதான் காரணமா?... இப்படி முதுகுல குத்திட்டாங்களே!
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிரமாண்ட படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி கழுவி ஊற்றப்பட்டது. குறிப்பாக கதையென்று படத்தில் பெரிதாக எதுவுமில்லை.
இதனால் விழுந்து விழுந்து இந்தியா முழுவதும் படக்குழு புரோமோஷன் செய்தும் எந்த புண்ணியமுமில்லை. கடந்த பத்து வருடங்களாக எந்த முன்னணி இயக்குநருடன் இணைந்தாலும் தோல்வியை தான் நடிகர் சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: அடிச்சு கிழிச்சு தொங்க விட்டுட்டீங்களே தலைவா!.. புஷ்பா 2 படத்துக்கு ப்ளூ சட்டை விமர்சனம்..!
இந்தநிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகி படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படி என்றால் இடையில் என்ன நடந்தது? ஏன் இப்படி படத்தின் வசூல் குறைந்தது என விசாரித்தால் கிடைக்கும் பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
நடிகருக்கு எதிராக அந்த பூ கட்சி செயல்பட்டது எதிர்பார்த்த விஷயம் தான். ஆனால் ஆளுங்கட்சி தரப்பும் பின்னணியில் இருந்திருக்கிறது. படத்திற்கு வந்த நல்ல விமர்சனங்களை நீக்க சொல்லி அழுத்தம் கொடுக்கவும் சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகி படம் ஊத்திக் கொண்டது.
இதையும் படிங்க: குப்பை படத்தை வெற்றின்னு சொல்வாங்க…. காலா படம் எந்த விதத்தில் தோல்வி? சீறிய இயக்குனர்
இந்த தகவல் நடிகரின் மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம். நல்ல பிரெண்ட்ஷிப் இருந்தும் இப்படி பண்ணிட்டாங்களே என நடிகர் மாய்ந்து மாய்ந்து புலம்ப அவரை தேற்றும் வழி தெரியாமல் கோயில் கோயிலாக மனைவி அவரை கூட்டிக்கொண்டு அலைகிறார்.
இதைபார்த்த ரசிகர்கள் ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன் அவரை போய் இப்படி புலம்ப வச்சுட்டீங்களே என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். பிரமாண்ட படம் எடுக்க ஆசைப்பட்டு இருக்கிற நிம்மதியையும் கெடுத்துக்கிட்டதுதான் மிச்சம்.