Biggboss: கமல் விலக இதுதான் காரணம்... வெளியான உண்மை!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகியதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து சுமார் 7 வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கமல். சொல்லப்போனால் வேறு யாரும் இவ்வளவு நுட்பமாக இதனை தொகுத்து வழங்க முடியாது என்று அனைவவரும் பாராட்டும் அளவிற்கு அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்காக சுமார் நூறு கோடிகளுக்கும் அதிகமாக அவர் சம்பளமாக பெற்றார். சுமார் 50 நாட்களுக்கும் குறைவாகத் தான் இதற்கு அவர் கால்ஷீட் கொடுத்தார் என்பதால் இந்த சம்பளம் ஒரு பெரிய தொகையாகத் தான் இருந்தது.
இந்த வருடமும் அவர் தான் தொகுத்து வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த ஷாக் முடிவதற்குள் விஜய் சேதுபதி தான் தொகுப்பாளர் என அடுத்த ஷாக் ஒன்றை சேனல் தரப்பில் இருந்து அளித்துள்ளனர்.
இந்தநிலையில் இதற்கான காரணம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது கமலிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே பிற நடிகர்களிடமும் தொகுப்பாளராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிட சேனல் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.
இந்த விஷயம் கமல் காதுகளுக்கு சென்றதால் இனியும் இந்த இடத்தில் இருந்தால் நமக்கு நல்லதில்லை என நாசூக்காக சொல்லிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார்.
ஏஐ கோர்ஸ் ஒன்றினை மூன்று மாதங்கள் படித்திட தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என காரணங்கள் சொன்னாலும் கூட, உண்மை காரணம் இதுதான் என்பது உறுதியாகியுள்ளது.
கமலின் இடத்தினை விஜய் சேதுபதி நிரப்புவாரா? என்பதை நாம் வழக்கம்போல காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.