காதலனை பார்க்க பிக்பாஸ் வீட்டில் நுழைந்த யாஷிகா - செம அட்வைஸ்!

by பிரஜன் |
yashika
X

yashika

காதலனை சந்திக்க பிக்பாஸில் நுழைந்த யாஷிகா!

பிக்பாஸ் 5 சீசன் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்குறது. இந்த நிகழ்ச்சியில் ராஜு, பிரியங்கா, தாமரை, நிரூப் , சஞ்சீவ் , பாவினி என அவரவர் தங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக காமெடி , நகைச்சுவைகளுக்கு குறைவில்லாமல் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸில் நுழைந்து சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கூச்சப்படாம பாருங்க!.. வெட்கமில்லாமல் போஸ் கொடுத்த ராஷி கண்னா…..

கண்ணாடி தடுப்பு சுவருக்கு வெளியே நின்றபடி யாஷிகா போட்டியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நிரூப் ஓடிவந்து யாஷிகாவை பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தார். மேலும், நிரூப் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டி போட்டியாளர்கள் அனைவருக்கும் குட் அட்வைஸ் கொடுத்தார்.

Next Story