கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். சினிமா துறையில் நுழைந்து அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்து வெளியான ‘லிப்ஃட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், க்யூட்டான அதே சமயம் சற்று கவர்ச்சியான உடையில் கட்டழகை காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…