
Cinema News
மீண்டும் ஆண் குழந்தைக்கு அம்மாவான எமி ஜாக்சன்.. அடேங்கப்பா.. என்ன பெயர் வச்சிருக்காரு பாருங்க!
நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக அம்மாவாகி உள்ளார். இரண்டாவதாக ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்துக் கொண்ட எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்பமாக இருப்பதை உறுதி செய்திருந்த எமி ஜாக்சனுக்கு தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார் .
நடிகை எமி ஜாக்சன், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, 2.0 உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாததால் அவர் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருக்கிறார்.
எமி ஜாக்சன் நடிப்பதற்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் டீன் வேர்ல்ட் அழகி போட்டியில் முதல் பரிசு பெற்றார் மற்றும் மிஸ் டீன் லிவர்பூல் விருதையும் வென்றார். மேலும் பல அழகி போட்டிகளில் கலந்துக்கொண்டு 18ற்கும் மேற்பட்ட விருதுகளை வென்று பரிசுகளை அள்ளி குவித்துள்ளார்.
எமி ஜாக்சன் ஜார்ஜ் பனாயிட்டோ என்பவரை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்துக்கொண்டார். திருமணம் செய்துக்கொள்ளாமல் அவருடன் பார்ட்னர் போல குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களிலேயே அவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
அதை தொடர்ந்து எமி ஜாக்சன் கடந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன் தான் இரண்டாவது முறையாக கற்பமாக இருப்பதை பதிவிட்டிருந்தார். தற்போது எமி ஜாக்சனுக்கு இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். அந்த குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயரும் சூட்டிய நிலையில், குழந்தையை கையில் ஏந்தியபடி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு மீண்டும் தமிழில் அவர் மிஷன் சாப்டர் 1 படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். 2வது குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிடுவார் என தெரிகிறது.