மகனுடன் நீச்சல் உடையில்.. ரஜினிகாந்த் பட நடிகை வெளியிட்ட ஹாலிடே புகைப்படங்கள்.. ஆடிப்போன ரசிகர்கள்!

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன் மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் மூலம் விரைவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அச்சம் என்பது இல்லையே என்கிற தலைப்பில் உருவான அந்த படத்திற்கு சமீபத்தில் ’மிஷன்’ என டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த படத்தை முடித்து விட்டு பாலிவுட்டில் ஒரு புதிய படத்தில் நடிக்க விரைவில் மும்பைக்கு செல்லப் போகிறேன் என நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் பாக்ஸிங் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதற்கு முன்னதாக தனது மகன் ஆண்ட்ரியாஸ் மற்றும் புதிய காதலர் எட் வெஸ்ட்விக் உடன் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் உடன் கடைசி படம்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் மதராசப்பட்டினம், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன் ஷங்கர் இயக்கத்தில் ஐ மற்றும் 2.0 உள்ளிட்ட 2 படங்களில் நடித்திருந்தார்.

ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு ஜார்ஜ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொள்ளாமல் அவருடன் குடும்பம் நடத்தப் போவதாக அறிவித்த எமி ஜாக்சன் அதற்காக சினிமா வாழ்க்கையை விட்டே விலகினார். மேலும், ஜார்ஜ் உடனான நெருக்கத்தின் காரணமாக ஆண்ட்ரியாஸ் எனும் மகனையும் பெற்றுக் கொண்டார்.

திருமணம் ஆகாமல் குழந்தை

இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது என்கிற கண்டிஷனை தொழிலதிபர் ஜார்ஜ் சொன்னது கொஞ்ச ஆண்டுகள் கழித்து எமி ஜாக்சனுக்கு பிடிக்காமல் போன நிலையில், அவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் தனது அம்மா வீட்டுக்கே வந்து விட்டார் எமி ஜாக்சன்.

அதன் பின்னர் சில அமெரிக்க வெப்சீரிஸ்களில் நடிக்க முயற்சி செய்து வந்த எமி ஜாக்சன் காசிப் கேர்ள் வெப்சீரிஸ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை சந்திக்க, அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். தொடர்ந்து இருவரும் டேட்டிங் செல்ல ஆரம்பித்த நிலையில், எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாகவும் அறிவித்து விட்டார் எமி ஜாக்சன். சினிமாவில் நடிப்பது மற்றும் தனக்கு ஒரு மகன் இருப்பது என எல்லா கண்டிஷனையும் சொல்லியும் அந்த அமெரிக்க நடிகர் சம்மதம் தெரிவிக்க அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் எமி ஜாக்சன்.

மகனுடன் நீச்சல் உடையில்

நடிகை எமி ஜாக்சனுக்கும் தொழிலதிபர் ஜார்ஜுக்கும் 2019ம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது அந்த குழந்தைக்கு 4 வயதாகிறது. நல்லாவே வளந்து விட்ட தனது மகனுடன் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

மீண்டும் சினிமாவில் பிசியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக காதலர் மற்றும் மகனுடன் ஹாலிடேவை தீவு ஒன்றில் கொண்டாடிய எமி அதன் போட்டோக்களை வெளியிட, அதனை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

 

Related Articles

Next Story