குழந்தை பெற்றாலும் உடலை மெயின்டெயின் செய்ய வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ரஜினி பட நடிகை...
முன்பெல்லாம் ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டால் அவ்வளவு தான் அவரின் மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சென்றுவிடும். ஆனால் தற்போது அப்படி அல்ல திருமணத்திற்கு பின்னர் தான் அந்த நடிகையின் மார்க்கெட்டே எகிற தொடங்குகிறது. உதாரணமாக நடிகை சமந்தாவை கூறலாம்.
சரி நாம் விஷயத்திற்கு வருவோம் இந்த வரிசையில் திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொண்டு அம்மாவான நடிகை ஒருவர் தற்போது தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அந்த நடிகை வேறு யாருமல்ல தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலமாக அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் தான். இப்படத்தை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட சில படங்களில் நடித்த எமி ஜாக்சன் இறுதியாக ரஜினியுடன் இணைந்து நடித்த 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் குழந்தையுடன் வசித்து வரும் எமி ஜாக்சன் குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை கடுமையாக வொர்க் அவுட் செய்து முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார். தற்போது இவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.