உங்களுக்கு நிஜமாவே வெள்ளை மனசுதான்... நடிகையை புகழும் ரசிகர்கள்..
நடிகை ஏமி ஜாக்சன், லண்டன் நகரில் பிறந்தவர், இளம் வயதிலேயே "மிஸ் டீன் வேர்ல்டு" பட்டம் பெற்று பிரபல மாடல் அழகியாக வலம் வந்தவர்.
ஏமி ஜாக்சன், பிரபல காமிக் கதாபாத்திரமான "சூப்பர் கேர்ள்" வேடத்தில் நடித்து ஹாலிவுட் உலகை கலகியவர். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த "மதராசபட்டினம்" திரைபடம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
ஏமி ஜாக்சனின் இன்டர்நேஷனல் திறமைக்கு தமிழில் "தாண்டவம், ஐ, 2.0" மற்றும் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் வாய்ப்புகள் குவிந்தன.
2015 ஆம் ஆண்டு முதல் "ஜார்ஜ்" என்பவரை காதலித்து வரும் ஏமி ஜாக்சன், திருமணம் ஆகாமல் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். இதன் காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்த இவர், மீண்டும் களம் இறங்கும் எண்ணத்தில் உள்ளார்.
தற்போது "உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் அவதிப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டி வருகிறார். ஏமி ஜாக்சனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.