மூக்குத்தி போட வேற இடம் கிடைக்கலயா டியர்!.. காஜி ரசிகர்களை சூடேத்தும் தனுஷ் பட நடிகை..
Amyra dastur: மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அமைரா தஸ்தூர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். அதன்பின் அப்படியே சினிமாவிலும் நுழைந்தார். முதலில் இவர் நடித்தது ஒரு ஹிந்தி படத்தில்தான்.
மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் கண்ணில் படவே அவர் இயக்கிய அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் சிறப்பான நடைப்பை வெளிப்படுத்தியிருந்தும் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். இடையிடையே தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு, சில ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் பகீரா என்கிற ஒரு தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்திருந்தார். அமைரா தஸ்தூர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. எனவே, தொடர்ந்து அவர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், ஜீன்ஸ் பேண்ட், டாப்ஸ் அணிந்து தொப்புளில் மூக்குத்தி அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஏங்க வைத்துள்ளது.