இப்படியெல்லாம் காட்டினா நாங்க காலி!.. வாலிப பசங்க மனசை கெடுக்கும் அமைரா...
மும்பையை சொந்த ஊராக கொண்டவர் அமைரா தஸ்தூர். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்த இவருக்கு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்படவே அதில் நுழைந்துவிட்டார். சில வருடங்கள் மாடலிங் துறையில் இருந்தார். பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
தனுஷின் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தா. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. எனவே, தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. எனவே, ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அமைரா அதிகமாக நடித்தது ஹிந்தி படங்களில்தான்.
எட்டு வருடங்களுக்கு பின் மீண்டும் பகீரா எனும் ஒரு தமிழ் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவே இல்லை. ஹிந்தியில் சில தொலைக்காட்சி தொடர்களிலும் அமைரா நடித்திருக்கிறார். எப்படியாவது பெரிய மாடல் மற்றும் நடிகயாக வேண்டும் என நினைக்கும் அமைரா தொடர்ந்து அசத்தலான அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் போடுவதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது., அந்த வகையில், வழக்கமாக கவர்ச்சி காட்டுவார் என்றாலும் இந்த முறை தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் இழுத்துள்ளார்.