Cinema News
கடைசி வரை மறுக்கப்பட்ட விருது – கண்டுகொள்ளாத நடிகர் திலகம் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் நடிப்பு ஜாம்பவானாக இருந்து பல சாதனைகளை செய்தவர். உலக நாயகன் கமல்ஹாசன் தனது குரு வாக எப்போதும் மேடைகளில் கூறுவது நடிகர் திலகம் சிவாஜியையும், நாகேஷ் அவர்களையும்தான்.
நடிப்பு பல்கலை கழகம்
நடிப்பை பொருத்த வரை சிவாஜி கணேசன் ஒரு பல்கலை கழகமாக கருதப்படுகிறார். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் எப்படிப்பட்ட நடிப்பு என்றாலும் சிவாஜியின் முக பாவனைகளும், உடல் அசைவுகளும், நடிப்பு மொழியும், வசன உச்சரிப்பும் சிவாஜிக்கு நிகர் சிவாஜி மட்டுமே என்று இப்போதும் சினிமா உலகில் கருதப்படுகிறார்.
சிவாஜியின் சிறந்த நடிப்பை பாராட்டி தாதா சாகிப் பால்கே விருது, செவாலியே விருது போன்ற மிக உயரிய விருதுகள் வழங்கப்பட்டு, அவர் கவுரவிக்கப்பட்டார். இப்போதும் முன்னணி நடிகர்களாக உள்ள பலரும், சிவாஜியின் நடிப்பை பார்த்து, பயிற்சி எடுத்துக்கொண்டவர்தான்.
இயக்குநர் அமீர் பேச்சு
ஆனால், இந்திய அரசு சிவாஜி கணேசன் என்ற நடிப்புலக மேதைக்கு உரிய அங்கீகாரம், மரியாதை தரவில்லை என்பதை பிரபல இயக்குநர் அமீர் தந்த ஒரு நேர்காணல் தமிழ் ரசிகர்களுக்கு உணர்த்தி இருக்கிறது.
சிவாஜி கணேசன் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகராக இருந்தவர். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அவர் வெளிநாடு சென்ற போது, அங்கிருந்த மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர்கள் மர்லின் பிராண்டோ போன்ற பலரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர்.
இந்தியாவில் சிறந்த நடிகர்
ஏனென்றால், அவர்களிடம் நிறைய டெக்னாலஜி இருந்தது. அதுபோன்ற எந்த டெக்னாலஜியும் இல்லாமல் நடிகர் சிவாஜி, மேக்கப் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, தனி ஒரு மனிதனாக அவர் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். ஒன்பது வேடங்களில் நடித்த நவராத்திரி, தெய்வ மகன் போன்ற படங்களை பார்த்து, அவர்கள் பிரமித்து போய்விட்டனர். இந்தியாவில் சிவாஜிக்கு மிஞ்சிய நடிகன் யாருமே இல்லை.
கடைசி வரை மறுக்கப்பட்ட விருது
ஆனால், அவ்வளவு சிறந்த நடிகரான சிவாஜிக்கு, இந்திய அரசு வழங்கும் தேசிய விருது கடைசி வரை கொடுக்கவில்லை. இது, எத்தனை பேருக்கு தெரியும். அவ்வளவுதான், அப்படித்தான் நிலைமை இருந்திருக்கு என்று கூறி இருக்கிறார் அமீர்.
காமராஜர் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக முதல்வராக இருந்தும், அவர்களிடம் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தும் சிவாஜி நினைத்திருந்தால், தேசிய விருதை பலமுறை வாங்கி இருக்க முடியும்.
மக்கள் கைதட்டலே மிகப்பெரிய விருது
ஆனால் தனக்கு தரக்கூடாது என வேண்டுமென்ற கடைசி வரை மறுக்கப்பட்ட தேசிய விருதை, கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டு, மக்கள் கைதட்டல்களை பல ஆயிரம் தேசிய விருதுகளாக பெற்றவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.