பொன்னியின் செல்வன் நந்தினிக்கு பின்னணி குரல் கொடுத்தது இந்த சின்னத்திரை நடிகைதான்?? என்னப்பா சொல்றீங்க!!
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. குறிப்பாக இதில் வந்தியத்தேவனாக நடித்திருந்த கார்த்தியின் சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது.
மேலும் குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும் தனது அசாத்திய நடிப்பால் பார்வையாளர்களை கொள்ளை கொண்டனர். இந்த நிலையில் நந்தினியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்யின் குரலை திரைப்படம் பார்த்தவர்களால் எளிதில் மறந்திருக்கமுடியாது. ஐஸ்வர்யா ராய்யின் கண்களில் வஞ்சகமும், வசீகரமும் கலந்திருந்ததுபோல் குரலிலும் கூட அந்த இரண்டு அம்சங்கள் தென்பட்டன.
இதையும் படிங்க: டிரைவர் ஜமுனா தள்ளிப்போனதுக்கு முக்கிய காரணம் இவர்தான்?? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்…
இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய்யின் வசீகர குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகையான தீபா வெங்கட் என்பவர்தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யிற்கு பின்னணி குரல் கொடுத்தவர். இவர் இதற்கு முன் தமிழில் பல கதாநாயகிகளுக்கு பின்னணி குரலாக திகழ்ந்துள்ளார். குறிப்பாக நயன்தாரா, காஜல் அகர்வால், சினேகா, சிம்ரன் போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு இவர் பின்னணி குரலாக திகழ்ந்துள்ளார்.
மேலும் தீபா வெங்கட் “தில்”, “பாபா”, “ஜெயங்கொண்டான்”, “கண்டேன் காதலை”, “ போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.