மணிவண்ணன் இவ்வளவு பெரிய அறிவாளியா? இதுவரை யாரும் அறியாத அரிய தகவல்…
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் திகழ்ந்த மணிவண்ணன், ஒரு மிகச் சிறந்த இயக்குனராகவும் வலம் வந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
“கோபுரங்கள் சாய்வதில்லை”, “நூறாவது நாள்”, “24 மணி நேரம்”, “ஜல்லிக்கட்டு” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் மணிவண்ணன். இவர் இயக்கிய “அமைதிப்படை” திரைப்படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அரசியல் நையாண்டி திரைப்படமாக இருக்கிறது. இவர் கடைசியாக இயக்கிய திரைப்படம் “நாகராஜ சோழன் எம்.ஏ எம்எல்ஏ”. இவ்வாறு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்ந்த மணிவண்ணன் கடந்த 2013 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
கம்யூசத்தில் ஈடுபாடு
இந்த நிலையில் மணிவண்ணன் குறித்து யாரும் அறிந்திடாத பல சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது மணிவண்ணன் வறுமையில் இருந்தாலும் வசதியாக வாழவேண்டும் என நினைப்பாராம். கையில் 500 ரூபாய் கிடைத்தாலும் 450 ரூபாய்க்கு ஆடை வாங்குவாராம். அதே போல் கையில் காசு இருந்தால் ஆங்கிலத் திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று பார்ப்பாராம்.
பின்னாளில் நல்ல நடிகராகவும் இயக்குனராகவும் உயர்ந்தபோது உலகத் தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவாராம். உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களை வாங்குவாராம். அவருடைய நூலகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இருக்குமாம்.
திரைப்பட அறிவு மட்டுமல்லாது மிகப்பெரிய ஞானமும் இருந்ததாம். கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாராம். உலக இலக்கியங்களை படிக்கக்கூடிய வழக்கம் உடையவராம். பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் பலவற்றை வாசிக்ககூடியவராம். அனைத்து ஆங்கில புத்தகங்களையும் படிக்ககூடியவர். மிகச் சிறந்த அரசியல் நையாண்டிகளை பேசுபவராக திகழ்ந்தாராம். நகைச்சுவை சுபாவம் கொண்டவராம். இவ்வாறு மணிவண்ணன் குறித்த அரிய தகவல்களை நடிகர் வாகை சந்திரசேகர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.