Cinema News
சிவாஜி வீட்டில் ஒரு எம்.ஜி.ஆர்!.. அது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!…
எம்.ஜி.ஆர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரின் வள்ளல் குணமும், ஈகை குணமும்தான். உதவி என யார் கேட்டு வந்தாலும் தன்னால் முடிந்ததை செய்வார். ஒருவருக்கு கஷ்டம் என தெரிந்தால் அவர்கள் கேட்பதற்கு முன்பே சென்று அவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்தான் எம்.ஜி.ஆர்.
அதனால்தான் நடிகர் என்பதை தாண்டி இப்போது வரைக்கும் அவர் பேசப்படும் நபராக இருக்கிறார். எம்.ஜி.ஆரை தேடி அவர் வீட்டுக்கு போனால் அவர்களிடம் எம்.ஜி.ஆர் கேட்கும் முதல் கேள்வியியே ‘சாப்பிட்டு விட்டீர்களா?’ என்பதுதான். ஏனெனில், சிறு வயது முதல் வாலிப வயது வரை வறுமையால் மட்டுமே வாழ்க்கையை ஓட்டியவர் எம்.ஜி.ஆர்.
அதனால், தன்னை சந்திக்க வீட்டிற்கு வரும் எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் உறுதியாக இருந்தார். அவரின் இராமாபுரம் வீட்டில் 12 மணி நேரத்திற்கு ஒருவர் என 2 சமையல் ஆட்கள் பணிபுரிந்தார்கள். 24 மணி நேரத்தில் எப்போது போனாலும் எம்.ஜி.ஆரின் வீட்டில் சாப்பாடு கிடைக்கும்.
இதையும் படிங்க: சிவாஜி – பத்மினி இடையே இருந்த காதல்!.. கல்யாணத்திற்கு தடையாக இருந்த அந்த காரணம்!..
இது ஒருபுறம் எனில் சிவாஜி வீட்டில் ஒரு எம்.ஜி.ஆர் இருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா!. அது வேறு யாருமில்லை. நடிகர் திலகத்தின் மகனும் மற்றும் நடிகருமான பிரபுதான் அது. அவருக்கு எப்படி அந்த பெயர் வந்த்தது என பார்ப்போம். ஸ்டுடியோவில் பிரபு நடித்துகொண்டிருக்கும்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் சென்று ‘உங்களின் பேட்டி வேண்டும்’ என கேட்டால், பிரபு உடனே ‘பக்கத்து படப்பிடிப்பில் விஜயகாந்த் இருக்கிறார். சத்தியராஜ் இருக்கிறார்… கார்த்திக் இருக்கிறார்… அவர்களிடம் சென்று பேட்டி எடுங்கள். மதிய உணவு இடைவேளையில் இங்கே வாருங்கள். சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்’ என சொல்வாராம்.
அதேபோல் அந்த பத்திரிக்கையாளருக்காக காத்திருப்பாராம். அவர் வந்தவுடன் சிவாஜி வீட்டில் இருந்த வந்த உணவுகளை அவரே அந்த நிருபருக்கு பரிமாறுவாராம். அவர் சின்ன பத்திரிக்கையாளர், பெரிய பத்திரிக்கையாளர் என எந்த பாராபட்சமும் பார்க்க மாட்டாராம். யாராக இருந்தாலும் அன்போடும், மகிழ்ச்சியோடும் அவர்களுக்கு விருந்தளித்து, உபசரித்து அவர்களை சந்தோசப்படுத்துவாராம்.
இதனால்தான் சிவாஜி வீட்டில் ஒரு எம்.ஜி.ஆர் என பத்திரிக்கை வட்டாரங்கள் பிரபுவை பலரும் சொல்வார்கள்.
இதையும் படிங்க: சிவாஜி தனக்கு செய்ததை பாக்கியராஜுக்கு செய்த எம்.ஜி.ஆர்!.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!…