Connect with us
goat

Cinema News

விஜய்ங்கிற ஆட்டை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி பிரியாணி போட்ருக்கார் விபி!.. கோட் எப்படி இருக்கு

Goat Review: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இன்று வெளியாகியுள்ள் கோட் படத்தை சகட்டுமேனிக்கு ஒரு யுடியூபர் கலாய்த்து தள்ளியிருக்கிறார். அவர் என்ன சொல்லி இருக்கார்னு வாங்க பார்ப்போம்.

சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு குழுவில் இருக்கும் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் எல்லோரும் ஒன்றாகவே வேலை பார்ப்பர்கள். ஆனால், ஒரு சம்பவத்தை விஜய் இல்லாமல் அரைகுறையாக செய்து முடிக்க அந்த வில்லன் பின்னாளில் இவர்களை என்ன செய்கிறான், அதை எல்லோரும் சேர்ந்து எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்தின் மைனஸே கதைதான். விஜயிடம் வெங்கட்பிரபு சொன்னபோது ‘இது எனக்கே புரியல’ன்னு சொல்லி சில மாற்றங்களை செய்திருக்கிறார். வெங்கட்பிரபு கதையை கொஞ்சம் மாற்றி சொல்லி ஓகே வாங்கிவிட்டார். அதன்பின் படத்தின் இண்டர்வெல் மற்றும் இரண்டாம் பாதியின் காட்சிகளை வி.பி மாற்றியிருக்கிறார்.

ஷூட்டிங் போனபின் விஜய் மறுபடியும் கன்பியூஸ் ஆகி அவர் ஒன்னு சொல்ல விபி ஒன்னு செய்ய என எதையோ எடுக்க நினைத்து எதையோ எடுத்து வைத்திருக்கிறார்கள். சொன்ன கதையை விட்டுவிட்டு ஒரு முக்கிய காட்சியை அடிப்படையாக வைத்து மற்ற காட்சிகளை அதோடு இணைத்துவிட்டார்கள்.
2024ல் வந்த படங்களிலேயே மிகவும் சுமாரான கதை இதுதான்.

goat

#image_title

மங்காத்தா போல விஜய்க்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என விபி ஆசைப்பட்டதிலும், அந்த படத்தில் நடித்த பலரையும் கோட் படத்தில் கொண்டு வந்ததிலும் தப்பில்லை. மங்காத்தாவுல 4 பேர வச்சி அஜித்தை லீடா வச்ச மாதிரி, கோட் படத்தலையும் பண்ணி இருக்கார். அதுவும் தப்பில்ல.

ஆனால், மங்காத்தா படத்துல அஜித் உள்ள போனார். இந்த படத்தில் வெங்கட்பிரபு உள்ளே போயிருக்கிறார். அதுதான் பெரிய மைனஸ். விஜயின் ஹிட் படங்களில் காட்சிகளை உருவி இந்த படத்தில் வைத்து ‘இப்ப எல்லாத்துக்கும் படம் பிடிக்கும்ல’ என சொல்ல கண்டம் பண்ணி வைத்திருக்கிறார் விபி. படம் ஃபுல்லா விஜயோட பழைய படங்களின் ரெஃபரன்ஸாக இருக்கிறது. மொத்தத்தில் கோட் படத்தில் வெங்கட்பிரபு புதிதாக ஒன்றும் செய்யவில்லை. விஜயை சிக்கன் குனியா வந்தது போல காட்டியிருப்பது மட்டும்தான் அவர் செய்த வேலை.

goat

#image_title

விஜயை பிடிக்காதவர்களுக்கு குருவியை கொண்டுவந்து பறக்கவிட்டிருக்கிறார். ‘என்ன பெரிய அட்லி.. வெங்கட்பிரபுவ தெரியுமா?’ என நிரூபித்து காட்டியிருக்கிறார். அவர் எடுத்ததிலேயே சுமாரான படம் இதுதான். பல நடிகர்கள் இருந்தாலும் ஃபோகஸ் விஜய் மீதே இருப்பதால் அவர்கள் எல்லோரும் சும்மா இருக்கிறார்கள். அதிலும் பிரசாந்த் உடம்ப இரண்டு ரவுண்டு குறைச்சாத்தான் சினிமாவிலயும் ஒரு ரவுண்டு வரமுடியும். வெள்ளையான யோகிபாபு போல இருக்கிறார்.

விஜயின் சில படங்கள் ஹிட் அடிக்காமல் போனாலும் பாடல்கள் ஹிட்டாகும். ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரு பாடல்தான் ஹிட் ஆகிறது. இனிமேல் எல்லா பாடல்களும் ஃபிளாப் ஆக வேண்டும் என்பதற்கு என்ன செய்யணுமோ அதை யுவன் சங்கர் ராஜா கச்சிதமாக செய்திருக்கிறார். பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாகவும், சில இடங்களில் எரிச்சலாகவும் இருக்கிறது.

goat

goat

படத்தில் எடிட்டிங்கும் சரியில்லை. கமர்ஷியல் படத்திற்கு 3 மணி நேரம் தேவையில்லை. படத்தின் தேவையில்லாத காட்சிகளை வெட்டினால் ஒரு மணி நேரம்தான் வரும். விஜய் எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்கிற கேள்வி மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ‘நாம் என்ன கொடுத்தாலும் இவனுங்க திம்பானுங்க’ என்கிற மனநிலையில் படம் எடுத்திருக்கிறார் விபி.

சின்ன வயசு விஜய்னு ரோபோட்டிக் பொம்மையை காட்டியிருக்காங்க.. வயதான கெட்டப்பும் விஜய்க்கு சூட் ஆகவில்லை. ஐ, வாரணம் ஆயிரம் படத்தில் வருவது போல உடம்பை வருத்தி விஜய் நடிச்சிருந்தா கூட பாராட்டி இருக்கலாம். ஆனால், வெறும் டெக்னாலஜியை நம்பியிருக்காங்க. விஜய் ஒன்னும் பண்ணல. ஆட்டை வெட்டி பிரியாணி போடலாம். ஆனா கோட் படத்தில் ஆட்டை பலி கொடுத்திருக்காங்க. இதுல ஆயிரம் கோடி வசூலாம். முடியல!…’ என கொளுத்தி போட்டிருக்கிறார்.

இந்த விமர்சனம் வீடியோவை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top