விஜயகாந்த் ஷூட்டிங்கில் ஆனந்தராஜுக்கு ஏற்பட்ட அந்த அனுபவம்.. அவரை மாத்தினதே அதுதானாம்!...
80களில் வில்லன் நடிகனாக கலக்கியவர் நடிகர் ஆனந்தராஜ். பல திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பயத்தை காட்டியவர். சத்தியராஜ், பிரபு, விஜயகாந்த், ரஜினி என பல நடிகர்களின் படங்களில் வில்லன் இவராகத்தான் இருப்பார்.
பொதுவாக சினிமா நடிகரென்றால் பொதுமக்கள் மத்தியில் எப்போதும் ஒரு கிரேஷ் இருக்கும். ரசிகர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இதனால்தான் பெரிய ஹீரோக்கள் பலருக்கும் முதல்வர் ஆகும் ஆசை கூட வருகிறது. இது ஒரு புறம் இருக்க, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் தன்னை மாற்றியதாக ஆனந்த ராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நான் அப்போது ஒரு விஜயகாந்த் படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். சென்னை அசோக் நகரில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்காக அங்கு சென்றிருந்தே. எனவே, எங்களை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. விஜயகாந்த் ரசிகர்களும் கூடிவிட்டனர். நாங்கள் இருவரும் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தோம்.
அப்போது ஒருவர் பைக்கில் வந்தார். நகருங்க.. நகருக்கு.. என எல்லோரையும் விலக்கி வந்தார். ‘இப்படி நடு ரோட்டில் ஷூட்டிங் நடத்தினால் நாங்கள் எப்படி போவது’ என திட்டிவிட்டு அவர் போய்க்கொண்டே இருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
சினிமாவை பார்க்காதவர்களுக்கும், அதை பெரிதாக நினைக்காதவர்களுக்கும் நாம் ஒன்றுமே இல்லை என்பது அப்போது எனக்கு புரிந்தது. நாம் ஒன்றும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. இது இறைவன் நமக்கு அளித்த பிச்சை. என் கண்ணை திறந்தவர் அவர்தான்’ என ஆனந்தராஜ் நெகிழ்ச்சியாக கூறினார்.
இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. ரேஷ்மாவை பார்த்து ஏங்கிப்போன ரசிகர்கள்..