பாலசந்தருக்கு வலது கை...கமலின் இனிய நண்பர்...இயக்கிய ஒரே படமோ செம மாஸ்..!
இயக்குனர் சிகரம் பாலச்சந்தரிடம் பணிபுரிந்தவர்கள் அவரின் தாக்கத்தோடு திரைப்படம் எடுத்தவர்கள் எனில் இயக்குனர் வசந்த் மற்றும் அனந்து ஆகியோரைச் சொல்லலாம்.
குறிப்பாக க்லோஸப் காட்சிகளைப் பார்த்தால் பாலசந்தரின் சாயல் தெரிந்து விடும். கதை, திரைக்கதை, வசனம் உதவி என அனைத்து வேலைகளையும் சினிமாவில் கனகச்சிதமாக செய்பவர் தான் அனந்து.
இன்றைய உலகநாயகன் கமலஹாசன் ரொம்பவே வித்தியாசமானவர். அவரது படங்களைப் பார்க்கும்போதும், நிஜவாழ்க்கையிலும் இது தெரியும். அப்பேர்ப்பட்ட கமலை ஆரம்ப காலங்களில் புரிந்து வழி நடத்தியவர் அனந்து. திரைத்துறையில் கிடைத்த அனுபவங்களால் கமலஹாசன் தற்கொலை செய்ய எண்ணியதைத் தடுத்து நிறுத்தியவர்.
அனந்துவின் இயக்கத்தில் வந்த ஒரே படம் சிகரம். 1991 ல் வெளிவந்தது. இன்று பார்த்தாலும் அதில் ஒரு ப்ரெஷ்னஸ் இருக்கும். இவர் இயக்குனர் ருத்ரையா உடனும் பணிபுரிந்திருக்கிறார். ருத்ரையாவும் பேசப்பட வேண்டிய இயக்குனர்.
ருத்ரையாவின் அவள் அப்படித்தான் படம் வந்த காலத்தில் பெரிதாக எடுபடாமல் சில காலத்திற்கு பிறகே பேசப்பட்டது. அந்த படத்தைப் பற்றி பேசும்போது ஜம்ப் கட், கட் ஷாட்ஸ் போன்ற வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கும்.
படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சட்டென்று காட்சி மாறும். அதைப் பார்க்கும் போது ஏதோ காட்சியை நாம் மிஸ் செய்தது போல் ஒரு உணர்வு வரும்.
சிகரம் படத்திலும் இதை உணரலாம. ஆனால் அது ஜம்ப் கட் போல் இல்லாமல் இருக்கும். இதில் வசனங்களை விட காட்சி அதிகம் பேசும் படியாக இருக்கும். அழகான ரம்யா கிருஷ்ணனை இந்தப் படத்தில் பார்க்கலாம். படம் மெதுவாக போவது போன்ற தோற்றம் அளிக்கும் ஆனால் காட்சிகள் வேகமாக நகரும்.
படம் முடியும் போது நாம் தியேட்டரை விட்டு வெளியே செல்வது போல் அல்லாமல் அந்த ஸ்கிரினுக்குள்ளேயே நாம் வாழ்ந்துவிட்டு வெளியே செல்வது போல ஒரு உணர்வு இருக்கும். இப்படி ஒரு உணர்வைக் கொடுப்பவர்கள் சிலரே.
அதில் முக்கியமாக பாலு மகேந்திரா, மகேந்திரன், பாசில் என இவர்களைத் தொடர்ந்து அனந்துவையும் சேர்க்கலாம். இவர் ஒரு படம் மட்டுமே இயக்கியுள்ளது தான் நமக்கு பேரிழப்பு.
எஸ்பி.பாலசுப்பிரமணியத்தின் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக இருக்கும். பின்னணி இசையிலேயே பல இசையமைப்பாளர்களின் மெச்சுரிட்டி தெரிந்து விடும். பாடல் மற்றும் பின்னணி இரண்டிலும் வெளுத்து வாங்கியிருப்பார் எஸ்.பி.பி.
இசையமைப்பாளரிடம் இருந்து சிறப்பான விஷயங்களைக் கறப்பது தான் சிறந்த இயக்குனரின் கடமை. அந்த வகையில் அனந்துவைத் தவிர்க்க முடியாது. அவரது சிகரம் பட பாடல்களே இதற்கு சாட்சி.
எஸ்பி.பாலசுப்பிரமணியத்துக்காக இந்தப் படத்தின் பாடல் வரிகள் இப்போது கேட்டாலும் ஒத்துப்போகும்.
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரமில்லை…சொந்தத்தில் பாஷை இல்லை.. சுவாசிக்க ஆசை இல்லை..கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கும் ஞானம் இல்லை..நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதும் இல்லை..தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை...என்ன ஒரு அருமையான வரிகள்...பாருங்கள்.
ஹீரோவின் படங்களாக பார்ப்பதை விட இயக்குனர்களின் படங்களாக பார்க்கும் போதே படத்தை முழுமையாக ரசிக்க முடியும். இயக்குனர் படமாக ரசிக்க வைத்தவர்களில் அனந்து மறக்க முடியாதவர். கமலஹாசன் அலுவலகத்தில் அனந்துவின் புகைப்படம் வைக்கப்பட்டு இருக்கும். கமலின் கைடு...இவர் தான். 2019ல் அனந்துவின் இந்த உருவப்படத்தைத் தனது அலுவலகத்தில் திறந்தார் கமல்.