
latest news
என்னை யூஸ் பண்ணிக்கிறாங்க… கஷ்டமா இருக்கு.. ஃபீல் பண்ணும் அனந்த் வைத்தியநாதன்
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 8 சீசன்களை கடந்து 9 வது சீசனில் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. அதுவும் ம.க.ப ஆனந்த் மற்றும் பிரியங்கா இவர்கள் தொகுத்து வழங்கும் விதம் அனைவரையும் இந்த நிகழ்ச்சி ஈர்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பல பேர் பங்கு கொண்டாலும் கடைசி சீசன் வரை வாய்ஸ் சேன்சரான அனந்த் வைத்தியநாதன் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்தார். ஆனால் இந்த சீசனில் அவர் பங்கு பெற வில்லை.

anand1
அதற்கான காரணத்தை அவரே கூறியிருக்கிறார். 2015 ஆம் ஆண்டு அவர் அகாடமி ஆரம்பித்தாராம். அதில் சேருவதற்கு ஏராளமானோர் வந்தார்களாம். ஆனால் இவரிடம் வந்தால் திறமையை நிரூபிக்கலாம் என்று வந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் ஆனால் இவரிடம் வந்தாலே விஜய் டிவிக்குள் நுழைந்து விடலாம் என்ற காரணத்தினால் தான் வந்தார்களாம்.
அது அவரை மிகவும் பாதித்து விட்டதாம்.மேலும் இந்த நிகழ்ச்சியை விட்டு போயிருக்க கூடாது என்றும் வருந்தி கூறினார் அனந்த். அதே சமயம் ஒரு ஃபேம்-க்காக அந்த ஷோவையே நினைச்சுட்டுதான் வராங்க என்றும் என்கிட்ட இருக்கும் சப்ஜக்ட்டை பத்தி நினைக்க மாட்டிக்கிராங்க என்றும் கூறினார்.

anand2
இந்த இமேஜை முதலில் மாற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவன் இவன் படத்தில் ஒரு அப்பாவியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் நடித்து விட்டு ஏண்டா இதில் நடித்தோம் என்று வருத்தப்பட வைத்ததாம். அதுமட்டுமில்லாமல் அனைவரும் எதுக்கு உனக்கு வேண்டாத வேலை என்றும் கேட்டார்களாம்.