Cinema News
‘இந்தியன் 2’ க்கு விகடன் கொடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா? கொடுத்த அட்வைஸையும் பாருங்க
ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. கமல் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரான படம்தான் இது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த படம். படம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றிருந்த நிலையில் ஒட்டுமொத்தமாக கதற விட்டிருக்கிறது இந்தியன் 2 திரைப்படம்.
எந்தளவு எதிர்பார்ப்பில் இருந்தார்களோ அதை விட பெரிய ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்தியன் படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகமும் அதே அளவு எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் படத்தின் திரைக்கதையில் மொத்தமாக சொதப்பி வைத்திருக்கிறார்கள் என்றும் படத்தின் நீளம் மக்களை போரடிக்க வைத்துவிட்டது என்றும் ஒரே புலம்பலாகத்தான் இருந்தது.
படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்.இந்த நிலையில் ஒரு புதிய படம் வெளியாகிறது என்றால் பல பேர் பல விமர்சனங்களை முன்வைப்பார்கள். ஆளாளுக்கு ஒன்னு சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதை எல்லாவற்றையும் தாண்டி பல வருடங்களாக ஆனந்த விகடன் கொடுக்கும் விமர்சனத்திற்காகத்தான் அத்தனை பேரும் காத்துக் கிடப்பார்கள்.
அந்த வகையில் இந்தியன் 2 படத்தை பற்றி ஆனந்த விகடன் அதன் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்திற்கு 39 மார்க்கும் போட்டிருக்கிறது. கூடவே இலவசங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாதது, எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிய மக்களை வண்டியிலேற்றிக் குறை சொல்வது என ‘ஷங்கரிஸம்’ இந்தப் படத்திலும் தொடர்வது வேதனையளிக்கிறது.
பாடலில் வருவதை போல இந்த இந்தியன் 2 தாத்தா நம்மைக் கதறவே விட்டிருக்கிறார் என்ற ஒரு விமர்சனத்தையும் கொடுத்திருக்கிறது. ஆக மொத்தம் கமலுக்கு விக்ரம் படத்திற்கு பிறகு ஒரு பெரிய அடியாக மாறியிருக்கிறது.