Connect with us
Kamal Haasan

Cinema History

1950களிலேயே உலக நாயகன்தான்… சிறு வயதிலேயே கமல்ஹாசன் செய்த சாதனை… என்ன தெரியுமா?

உலக நாயகன்

உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன் ஒரு மிகப் பெரும் கலைஞர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை. ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் இடையேயும் அவ்வளவு வித்தியாசங்களை காண்பிப்பார் கமல்ஹாசன். சிவாஜிக்கு அடுத்தப்படியாக கமல்ஹாசன்தான் நடிப்பிற்கே பல்கலைக்கழகம் என்று போற்றப்படுகிறார். அதையும் தாண்டி ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் கமல்ஹாசன் செய்யும் மெனக்கெடல்கள் பலவும் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை.

Kamal Haasan

Kamal Haasan

இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது மட்டுமல்ல, சிறு வயதிலேயே தனது நடிப்பிற்காக பெருமளவு பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். இது குறித்து பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், ஒரு முக்கியமான தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

ஆனந்த விகடன் பாராட்டு

“தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் ரீதியாக முதன்முதலில் மிகப்பெரிய சாதனையை படைத்த திரைப்படம் என்றால் அது விக்ரம் திரைப்படம்தான். அப்படிப்பட்ட சாதனையை செய்த உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பாற்றல் எத்தகையது என்பது நாடறிந்த விஷயம். ஆனால் அதற்காக போடப்பட விதை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

TKS Brothers

TKS Brothers

எப்போதும் நாடக உலகில் புதுமைகளை செய்த டிகேஎஸ் சகோதரர்கள், முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார். அதில் குமார் என்ற சிறுவனாக நடித்த கமல்ஹாசனின் நடிப்பு அபாரமாக அமைந்திருக்கிறது. இது டிகேஎஸ் நாடகத்தை பற்றி ஒரு பத்திரிக்கையில் எழுதப்பட்ட விமர்சனம். இந்த விமர்சனத்தை ஆனந்த விகடன் பத்திரிக்கை 1965 ஆம் ஆண்டு வெளியிட்டது” என்று ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

Kamal Haasan

Kamal Haasan

கமல்ஹாசன் சிறுவனாக இருந்தபோதே அவரது நடிப்பை அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஆனந்த விகடன் இதழ் பாராட்டியிருக்கிறது என்றால் பாருங்கள்..

இதையும் படிங்க: ஸ்ரீதேவியை பெண் கேட்கப் போன இடத்தில் நடந்த அபசகுணம்… காதலை உள்ளுக்குள்ளேயே பூட்டி புதைத்துக்கொண்ட ரஜினிகாந்த்…

google news
Continue Reading

More in Cinema History

To Top