ஆனந்தராஜ் வாய்ப்பை பிடுங்கிய கார்த்திக்... படத்தில் இருந்து துரத்தி விட்ட சோகம்...
தமிழ் சினிமாவில் கொடூர வில்லனாக இருந்த ஆனந்தராஜ் தற்போது காமெடியனாக கலக்கி வரும் நிலையில், அவரின் முதல் பட வாய்ப்பை கார்த்தி தட்டி தூக்கிய சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறதாம்.
சினிமாவில் வர வேண்டும் என நினைத்தவர் திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இவருடன் தான் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும், இயக்குநர் ஆர்.கே செல்வமணியும் படித்தனர். அவர்களுடன் எல்லாம் போட்டு போட்டு அந்த வருடத்தின் சிறந்த மாணவராக பட்டம் பெற்றார். ஆனால் அங்கு தான் ஒரு ட்விஸ்ட் இருந்தது. இவருக்கு விருது கொடுக்கும் போதே, சிறந்த மாணவர்னு அவார்டு வாங்கின யாரும் சினிமாவுக்கு போனதே இல்லை. இவராவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என கூறுகின்றனர்.
இதனால் அந்த விருதை மகிழ்ச்சியுடன் ஆனந்தராஜால் வாங்க இயலவில்லை. அந்த விருது குறித்து அறிந்த அங்கிருந்தவர்கள் முன்னால் தர்மசங்கடமாக போனதாம். ஆனால் அந்த விருதினை போலவே அவர் வாழ்க்கையிலும் சில தர்மசங்கடம் நடந்ததாம். வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த போது அவருக்கு கோபுர வாசலிலே படத்தில் வில்லன் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
படக்குழுவுடன் இவரும் இணைந்து படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு சென்று விட்டார். ஆனால் ஷூட்டிங்கில் நடிக்க ஆசையாக தயாராகி வந்து நிற்கிறார். ஆனால் ஷூட்டிங்கிற்கு பதில் நடிகர் கார்த்திகிற்கும் இயக்குனருக்கும் சண்டையே போய்க்கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து உங்களை இந்த படத்தில் இருந்து தூக்கிவிட்டோம் என இயக்குனர் கூறினாராம்.
கார்த்திக் சார் அவர் நண்பரை இந்த படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் என்பதையும் கூடுதலாக சொல்ல மனம் உடைந்தே போய் விட்டாராம். இருந்தும் எதுவும் நல்லதுக்கே எற ரீதியில் தொடர்ச்சியாக வாய்ப்பு தேடிக்கொண்டே இருந்தாராம். ஒரு கட்டத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளால் தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.