எனக்கு செருப்படி வாங்கிக்கொடுக்க பார்க்குறீங்களா? ரஜினியிடமே காண்டான வில்லன் நடிகர்...

Badsha
சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்க இருந்த நடிகர் ஒருவர் தனது காட்சியை கேட்டவுடன் வெகுண்டெழுத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எப்போதும் சினிமாவின் வில்லன்களே ஹீரோகளின் மாஸை அதிகரிப்பர். அப்படி கம்பீரமான வில்லன்கள் கொண்ட படங்கள் மாஸ் ஹிட்டாகவும் மாறும். அதிலும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்தை கொண்ட ரஜினிக்கெல்லாம் வில்லனாக இருக்க யார் ஆசையில்லாமல் இருப்பார். அப்படி ஒரு சம்பவம் தான் பாட்ஷா படத்தில் நடந்து இருக்கிறது.

anandha raj
ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன்,சரண்ராஜ் மற்றும் பலரும் நடித்த தமிழ்த் திரைப்படம் பாட்ஷா. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் "மாணிக்கம்" என்ற ஆட்டோ டிரைவராகவும், பிளாஷ்பேக்கில் முன்னாள் மும்பை தாதா பாட்ஷாவாகவும் நடித்தார். அவருக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ரகுவரன். அவரின் காட்சிகளை இன்று பார்த்தாலும் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இந்த படத்தின் முதல் சில காட்சிகளில் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். சின்ன வேடமே வந்தாலும் அவரின் காட்சிகளும் பலராலும் ரசிக்கப்பட்டது. முதலில் இந்த காட்சிக்கு சரியான நபரை தேடிய போது ரஜினிகாந்த் தான் ஆனந்தராஜை சிபாரிசு செய்தாராம். ஆனந்தராஜிடம் ஷூட்டிங்கில் தான் கதாபாத்திரம் என்னவென்று கூறப்பட்டது.

anandha raj
அதை கேட்டவர், ஷாக்காகி என்ன சார் செருப்படி வாங்க்கிகொடுக்க பார்க்குறீங்களா? தியேட்டர் திரை தான் கிழியும். நான் வரல என பயந்தாராம். ரஜினியோ என்னை அடிக்கிறதுக்கு, சரியான ஆள் நீங்க தான் எனக் கூறினாராம். அதைக்கேட்ட பிறகே ஆனந்தராஜ் அந்த கதாபாத்திரத்தில் நடித்துக்கொடுத்ததாக கூறப்படுகிறது.