அவங்க செம மாஸ் ஆச்சே!..ராகவா லாரன்ஸின் படத்தை இயக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்கள்....
by சிவா |
X
நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் ராகவா லாரன்ஸ். ஒருகட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். முனி திரைப்படம் மூலம் ஹாரர் காமெடி படங்களை அறிமுகப்படுத்தினார்.
அதன்பின், காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். ஒருப்பக்கம் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் நடிக்கவுள்ள துர்கா என்கிற திரைப்படத்தை பிரபல சண்டை காட்சி இயக்குனர்கள் அன்பு மற்றும் அறிவு ஆகியோர் இயக்கவுள்ளனர். இவர் கேஜிஎப், கேஜிஎப் 2 உட்பட பல பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு சண்டை காட்சி அமைத்தவர்கள்.
இந்த அறிவிப்பை ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். துர்கா படம் தொடர்பான லாரன்ஸின் லுக் மிரட்டலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story