பிரபல நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட தமன்னா.... காரணம் தெரியுமா?

by adminram |
tamanna
X

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சி இந்தியாவில் இதுவரை ஹிந்தியில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் முதன் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

அதன்படி தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாஸ்டர் செப் நிகழ்ச்சியை பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார். தமிழில் செல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு சுமாரான வரவேற்பை இந்நிகழ்ச்சி பெற்று வருகிறது. நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கும் ஓரளவிற்கு கிடைத்து வருகிறது.

அந்நியன் மாதிரி மாறி மாறி நடிக்கும் அபிஷேக் ராஜா..! என்னங்க நடக்குது வீட்டுக்குள்ள..!

இதேபோல் தெலுங்கில் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மாஸ்டர் செப் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் தான் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனால் தமிழைவிட தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்கு சுத்தமாக வரவேற்பு கிடைக்க வில்லையாம்.

tamanna

இதுதவிர நிகழ்ச்சிக்கு மோசமான ரேட்டிங் வேறு கிடைத்து வந்ததாம். எனவே நிகழ்ச்சி குழுவினர் நடிகை தமன்னா மாற்றி விட்டு அனுசுயா என்னும் பிரபல டிவி நடிகை ஒருவரை மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக்க முடிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.

25 லட்சம் பணத்தை அலேக்கா தூக்கி சென்ற சமந்தா.. சமந்தா செம ஹேப்பி அண்ணாச்சி!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவை தூக்கி விட்டு ஒரு டிவி நடிகையை தொகுப்பாளினியாக்குகிறார்கள் என்றால், தமன்னாவிற்கு அந்த அளவிற்கு மார்க்கெட் குறைந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story