ஹாலிவுட் படத்த சுட்டு எடுத்த ‘அன்பே வா’... இப்பவும் அந்த படம் ஒரு கிளாசிக்...

by சிவா |
anbe vaa
X

anbe vaa

எம்.ஜி.ஆர் என்றாலே சரித்திர படம் அல்லது சண்டை படங்களில் மட்டுமே நடிப்பார் என பலரும் நினைக்கிறார்கள். அதில் உண்மையில்லை. அவர் மனதை உருக்கும் செண்டிமெண்ட் படங்களில் நடித்துள்ளார். தாயின் மடியில் படம் பார்த்தால் அது புரியும்.

எம்.ஜி.ஆரின் பெரும்பாலன படங்களில் அதிரடி சண்டை காட்சிகள், டெரர் வில்லன், குடும்ப செண்டிமெண்ட் என இவையெல்லாம் இருக்கும். ஆனால், இது எதுவுமே இல்லாமல் அவர் நடித்த படம் ஒன்று இருக்கிறது. அதுதான் ‘அன்பே வா’. இப்படம் இப்படம் 1996ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி அதாவது அந்த ஆண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆனது.

anbe vaa

anbe vaa

இப்படம் நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் வயது 50. ஆனால், அவ்வளவு ஹேண்ட்சம்மாக இருப்பார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருப்பார். மேலும், நாகேஷ், மனோரமா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது. எம்.ஜி.ஆர் ஏவிஎம் நிறுவனத்துக்காக நடித்து கொடுத்த முதல் மற்றும் கடைசி படம் அதுதான்.

anbe

anbe

அன்பே வா திரைப்படம் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜா தேவி இருவரின் ஈகோவை மையமாகவே வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இருவரும் இருவருக்குள்ளும் இருக்கும் காதலை கடைசிவரை சொல்லி கொள்ள மாட்டார்கள். இப்படத்தில் வில்லனே கிடையாது. அவர்கள் இருவரின் ஈகோவே வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் இளமை ததும்ப துள்ளலாக நடனமாடியிருப்பார் எம்.ஜி.ஆர். இப்படம் 1961ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘Come September' படத்தின் கதை ஆகும். அதை எம்.ஜி.ஆருக்காக கொஞ்சம் மாற்றி திரைக்கதை அமைத்திருப்பார் திருலோகசந்தர். இப்படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது.

இப்போதும் இப்படம் ஒரு கிளாசிக் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க : டபுள் பாசிட்டிவ் என்றால் என்ன?? இப்படி ஒரு வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா??

Next Story