இந்த ஆங்கரை நியாபகம் இருக்கா? புதிய அவதாரம் எடுத்து ஷாக் கொடுத்த ஆதம்ஸ்.. நீங்களுமா?

by Rohini |
adams
X

adams

Actor Adams: சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமே ரசிகர்களை ஆக்கிரமித்து வந்த நிலையில் இப்போது புதுபுது பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் நடத்த தொடங்கியதால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ரசிகர்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுப்பாளர்களுக்கும் என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள். உதாரணமாக விஜய் டிவியில் பல ஆண்டுகளாக இருந்த டிடிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதே போல் அர்ச்சனா, பிரியங்கா, ம.க.பா. ஆனந்த், கோபிநாத் என பல முக்கிய தொகுப்பாளர்கள் இன்றுவரை பல நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் மியூஸிக்கில் ஆங்கராக இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் தொகுப்பாளர் ஆதம்ஸ். இவரை பிடிக்காதவர் என யாரையும் சொல்லமுடியாது.

இதையும் படிங்க: எல்லாரும் பாருங்க.. ஃப்ரி ஷோ!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் பிரியா ஆனந்த்…

அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர். பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். பல முன்னனி ஹீரோ ஹீரோயின்களையும் பேட்டி எடுத்திருக்கிறார். ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கொஞ்ச நாள்களாகவே ஆதம்ஸை மீடியா பக்கம் பார்க்க முடியாமல் போனது. என்ன ஆனார் என அவரது ரசிகர்களும் தேடிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அவரை பற்றி ஒரு அப்டேட் வந்திருக்கிறது. ஆதம்ஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் ‘Can’ என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படம் காதல் ரொமாண்டிக் கலந்த த்ரில்லர் படமாக வரவிருக்கிறதாம். கிட்டத்தட்ட வாலி படத்திற்கு இணையான கதை என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கடைசில நாசருமா? வடிவேலு யாரையும் விட்டுவைக்கல போல.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்தப் படத்தை பற்றி கூறிய ஆதம்ஸ் பாலசந்தர் போன்ற கதையும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாக்யராஜ் திரைக்கதையும் சேர்ந்த மாதிரி இந்தப் படத்தை எடுக்க இருக்கிறேன் என்றும் ஆதம்ஸ் தெரிவித்திருக்கிறாராம். மேலும் இந்தப் படத்தில் கலையரசன் தான் லீடு ரோலில் நடிக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் தம்பி ராமையா, கோவைசரளா, ரோபோ சங்கர், போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடிக்க இருக்கிறார்களாம்.

Next Story