தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு இப்படி ஒரு விபத்தா? பெரிய கட்டால இருக்கு?
Anchor Anjana: இப்போது நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ஃபேன்ஸ் இருக்கிறார்களோ அதைப்போல சினிமா நிகழ்ச்சிகள் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினி அஞ்சனா ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை பெற்ற ஆங்கராக இன்றுவரை இருந்து வருகிறார்.
இவருடைய அமைதியான பேச்சும் இன்முகமும் அனைவரையும் ரசிக்க வைக்கும். பிரபல தனியார் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அஞ்சனா அந்த தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட பத்து வருட காலம் ஆர்ஜேவாக இருந்து வந்தார். அப்பொழுதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இதையும் படிங்க: ‘கொடி’க்கு பிறகு மீண்டும் வில்லியாக களமிறங்கும் திரிஷா! யார் ஹீரோனு தெரியுமா?
அவருடன் சேர்ந்து தொகுப்பாளினி மணிமேகலையும் சேர்ந்து ஆர்ஜேவாக பணியாற்றி வந்தார். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் தான் டாப் ஆர்ஜேவாக இருந்துள்ளார்கள். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என அடுத்த கட்ட நகர்வுக்கு மாறினார் அஞ்சனா. இன்று பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி அஞ்சனா தான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக இருந்து வருகிறார்.
இவர் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கயல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் சந்திரன். இருவருக்கும் திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அவருடைய இளமை குறையாமல் தன்னுடைய அழகை கட்டுக்கோப்பாக வைத்து பராமரித்து வருகிறார் அஞ்சனா.
இதையும் படிங்க: கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!…
இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சனாவை நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது சமீபத்தில் தான் தெரிய வந்திருக்கிறது. அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் திடீரென ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் கையில் பெரிய கட்டு போட்டு மருத்துவமனையில் உட்கார்ந்த மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அவர் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் விழுந்து விட்டதாகவும் அதனால் அவருடைய முழங்கையில் அடி ஏற்பட்டதாகவும் அதனால் தான் கட்டுப்போட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். கூடிய சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன் என அந்த பதிவில் பதிவிட்டிருக்கிறார் அஞ்சனா.
இதையும் படிங்க: அம்மாவை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய தளபதி…வெளியான பரபரப்பு வீடியோ!..