பிரபல தொகுப்பாளினியின் மகளுக்கா இப்படி...? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விஜய் டிவி தொலைக்காட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா இவர் பல வருடங்களாக பல நிக்ழ்ச்சிகளை தொகுத்து வழ்ங்குகிறார். சன்டிவி, ஜி தமிழ், என பல்வேறு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார்.
இவரின் அசால்ட்டான பேச்சு, எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் இவரை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு போய் சேர்த்தது. கடந்த சில காலங்களில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியால் ரசிகர்களின் பேச்சுக்கு ஆளானர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் டாக்டர் படத்தில் நடித்து இன்னும் நிறைய ரசிகர்களை ஈர்த்தார்.இவரும் இவர் மகள் ஷாராவும் இணைந்து அவ்வப்போது இணையத்தில் பல கருத்துக்களை பற்றி விவாவதித்து கொண்டு இருப்பர்.
அப்படி ஒரு நிலையில் ஷாரா தனது இன்ஸ்டாவில் லைவில் ரசிகர்களுடன் உரையாடும் போது ஒரு நபர் 13 வயதே ஆகும் ஷாராவிடம் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்க ஷாரா அர்ச்சனாவிடம் சொல்ல அர்ச்சனாவோ கோவப்படுவார் என எதிர்பார்க்க அவர் கூலாக 15 வருடம் கழித்து வந்து பெண் கேள் அப்புறம் யோசிக்கலாம் என அவரை ஃபன் பண்ணியுள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் இப்படியுமா அந்த சின்ன பொண்ணிடம் நடந்திப்பீங்கனு பொதுவா திட்டி வருகின்றனர்.