More
Categories: Cinema History Cinema News latest news

என்ன நட்டுக்கிட்டு நிக்குமா?..தொகுப்பாளரிடம் கலாய் வாங்கிய இயக்குனர்!. இது என்னடா சின்ன தலக்கி வந்த கொடுமை..

தற்சமயம் அதிக பிரபலங்களை உருவாக்குவதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. முன்பெல்லாம் நடிப்பதற்கு நடிகர் நடிகைகளை நடிப்பை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களைதான் சினிமாவில் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதற்கு தகுந்தாற் போல அவர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அமலா ஷாஜி மாதிரியான பல பெண்கள் இப்படி இன்ஸ்டாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் 2கே கிட்ஸிடம் செல்வாக்கு பெற்ற நபராக டி.டி.எஃப் வாசன் இருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க:பிக்பாஸுக்கு போனால் இந்த நிலைமைதான்! ராஜு இப்போ என்ன பண்ணிட்டுகிட்டு இருக்காருனு தெரியுமா?

பைக் ரைடரான டி.டி.எஃப் வாசன் யு ட்யூப் சேனலில் தனது இரு சக்கர வாகன சாகசங்களை வீடியோவாக போட்டு வந்தார். இதற்கு நடுவே சட்ட மீறல் தொடர்பாக சில பிரச்சனைகளையும் சந்தித்து வந்தார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக தொடர்ந்து அவர்களிடம் ஆதரவை பெற்று வந்தார்.

கலாய் வாங்கிய இயக்குனர்:

தற்சமயம் டி.டிஎஃப் வாசன் நடிப்பில் மஞ்சள் வீரன் என்னும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கி உள்ளது. செல்அம் என்கிற இயக்குனர் இந்த படத்தை இயக்கினார். இடையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசும்போது அவரை நன்றாக கலாய்த்து எடுத்துள்ளார் தொகுப்பாளர்.

இதையும் படிங்க:ரஜினியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!.. சண்டையில சட்ட கிழிஞ்சிரும் பரவால்லயா!..

மயிர் கூச்செரியும் வகையில் படம் இருக்கும் என இயக்குனர் கூறும்போது அப்ப எல்லாமே எழுந்திருச்சி நிக்குமா சார் என இரட்டை அர்த்தத்தில் கேட்டு இயக்குனரை கடுப்பேத்தி உள்ளார் தொகுப்பாளர். இந்த நிலையில் 2கே கிட்ஸ் சின்ன தல என கொண்டாடும் டி.டி.எஃப் இன் படம் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.

இதையும் படிங்க:பாரதிராஜாக்கிட்ட வச்சிக்கிட்டா அவ்ளோதான்.. கன்னம் சிவக்க அடி வாங்கிய உதவி இயக்குனர்!..

Published by
Rajkumar

Recent Posts