டிரஸ் ஓகே. அத எப்டி குறைப்பிங்க..? பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள்..!
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், தி வால், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லிபெல்லி போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரபலமானவர் நம்ம பிரியங்கா. தென்னிந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர்.
இவரும் கோ-ஆங்கர் மா.க.பா.ஆனந்தும் இணைந்து வந்தாலே ஸ்டேஜ்ல கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவுக்கு இவர்களுக்குள்ள இருக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகும். இவர் பிக்பாஸ் போனதுல இருந்து நிகழ்ச்சியில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் பிக்பாஸ் வீடு எந்நேரமும் சிரிப்புமயமாக இருந்தது இவரின் காமெடியால்.
பிரியங்கா ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக் மற்றும் ஸ்டார் விஜய் போன்ற பல்வேறு இந்திய தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் பெரும்பாலும் தொலைக்காட்சியின் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடப்படுகிறார்.
கலாட்டா நக்ஷத்ரா டிவி-திரைப்பட விருதுகளில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான விருதை பிரியங்கா வென்றுள்ளார். இதுவரை இவரை ரீபிளேஸ் பண்ண யாரும் இல்லை. இவர் அடிக்கடி சமூக வலைதள்ங்களில் ரசிகர்களுடன் இணைப்பிலயே இருப்பார்.
இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் 96 படத்தில் த்ரிஷா அணிந்த சுடிதாரில் போஸ் கொடுத்து ரசிகர்களை பிரமிக்கவைத்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் சில பேர் கலாய்த்தும் கமென்டுகளை பதிவிட்டுள்ளனர்.