உன்ன கட்டிக்க போறவன் கதி அதோ கதிதான்..! பிபி ஏகிற வைக்கும் ஆண்டிரியா..

by Rohini |
andrea_main_cine
X

தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவரின் அலாவதியான குரலால் சீக்கிரமே மக்கள் மத்தியில் பரிட்சயமானார். இவரின் திறமையையும் அழகையும் கண்டு நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

andrea1_cine

இவரின் முதல் படமான “பச்சைக்கிளி முத்துச்சரம்” நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவரின் அடுத்தடுத்த படங்களான ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை-2, தரமணி போன்ற படங்கள் இவரின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் படங்களாகும். முக்கியமாக வடசென்னை படத்தில் வில்லி போன்ற தோற்றத்தில் அசத்தியிருப்பார்.

andrea2_cine

மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகச்சிறந்த திறமைசாலியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

andriya3_cine

இந்த நிலையில் பாரீஸ் சென்றுள்ள இவர் அங்கு அவருக்கு பிடித்த இடங்களை படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்காக ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் புகைப்படங்களை ரசித்து வருகின்றனர்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/Ca_gHn0Ls2Y/?utm_source=ig_web_copy_link

Next Story