ஒட்டகம் மேலே ஒரு குதிரை சவாரி செய்கிறதே..!! எகிப்தில் ஆண்ட்ரியா!

by ராம் சுதன் |
andrea jeremiah
X

andrea jeremiah

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007ல் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இப்படத்தையடுத்து செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இப்படத்தின் வெற்றியால் இவருக்கு அடுத்ததடுத்து வாய்ப்புகள் அமைந்தது. இதபின் தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்திருந்தார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும், பின்னணி பாடகியாகவும் அசத்தி வருகிறார்.

andrea jeremiah

andrea jeremiah

அதுமட்டுமல்லாமல் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'துப்பறிவாளன்' படத்தில் வில்லியாகவும் நடித்து அசத்தியிருந்தார். மேலும், வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்க மகன் ஆகிய படங்களில் நாயகிக்கு டப்பிங் குரல் கொடுத்ததும் இவர்தான்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் மாலத்தீவிற்கு சென்று அங்கு எடுத்த தனது பிகினி படங்களை பதிவேற்றி இளசுகளை சூடேற்றினார்.

andrea jeremiah

andrea jeremiah

அந்தவகையில் தற்போது எகிப்து சென்றுள்ள அவர் அங்கு தான் எடுத்த படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். பிரமிடுகள் மற்றும் பல இடங்களில் எடுத்த படங்களை பதிவேற்றியுள்ளார். மேலும் ஒட்டக சவாரி செய்யும் படம் ஒன்றையும் பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஒரு குதிரையை ஒட்டகத்தின்மீது போகுது என கமெண்ட் செய்துள்ளனர்.

Next Story