அந்த பார்வையே ஷோக்கா வைக்காதே.. ம் சொல்றியா பேபி!!

தமிழ் சினிமாவில் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பன்முகத்தன்மைகொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார்.
சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ம் சொல்றியா' என்ற ஐட்டம் பாடலை பாடி தனது காந்த குரலால் இளசுகளை வீழ்த்தியுள்ளார். நடிகையாக பச்சைக்கிளி முத்துச்சரம் அறிமுகமான இவர் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் தவிர இவர் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆடுகளம், நண்பன் ஆகிய படங்களில் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இவர்தான். இதுதவிர ஆண்ட்ரியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தந்து கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

andrea jeremiah
அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்ட்டாவில் ஒரு புகைப்படத்தி பதிவிட்டுள்ளார். அதில் இறுக்கமான மஞ்சள் நிற உடையில், நின்று செல்பி எடுத்து பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தால் ரசிகர்களை மிரட்டியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள், இந்த பார்வையே சொக்க வைக்குதே, பேபி உம் சொல்றியா என்று சமந்தாவுக்காக அவர் பாடிய பாடலையே கமெண்ட் செய்து வருகின்றனர்.