இவரு வேற மாதிரியான ஆளு...! ஒரே வரியில் தேசிய விருது இயக்குனரை தொங்க விட்ட ஆண்டிரியா..
கண்ட நாள் முதல் படத்தில் சின்ன ரோலில் முதன்முதலில் அறிமுகமானவர் நடிகை ஆண்டிரியா. நடிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாததால் பாடகியானார். முதல் பாடலே பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. கந்தசாமி படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா தான் இவர் பாடிய முதல் தமிழ் பாடல்.
அதன் பின் வாய்ப்புகள் வரத் தொடங்கியது. தனது காந்த குரலால் ரசிகர்களை ஈர்த்தார். இவரின் அழகை பார்த்து நடிக்க பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. தவிர்க்க முடியாமல் நடிப்பை தொடங்கினார். இவர் நடித்த படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தது.
வடசென்னை, தரமணி, அடுத்த படமான பிசாசு-2 ஆகிய படங்கள் இவரின் கெரியரில் முக்கியமான படங்களாகும். இந்த நிலையில் ஒரு பேட்டியில் வெற்றிமாறன் படத்தில் உங்களை அணுகியது எப்படினு கேட்க அவரின் முதல் படமான பொல்லாதவன் படத்திற்கு முன்னாடியே கதை சொன்னார் நான் தான் முடியாதுனு சொல்லிட்டேன் என கூறினார்.
மேலும் அவரை பற்றி வெற்றிமாறன் சார் செட்ல வேற மாதிரியான ஆளாத்தான் இருப்பார். அதை படத்த பாத்தாலே தெரியும்.ஆனால் நல்ல மனுஷன் என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.