நீ என் அப்பா கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கியா.! ஆண்ட்ரியாவை வம்பிழுத்த வாரிசு நடிகை.!
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி, நல்ல இசையமைப்பாளர்கள் இசையில் நல்ல நல்ல பாடல்களை பாடி வந்தவர் பாடகி ஆண்ட்ரியா. அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. அந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கி இருந்தார்.
பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா, கதாநாயகன் சரத்குமார், வில்லி வேடத்தில் ஜோதிகா நடித்திருப்பார். இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவாராம். அங்கு வந்து ஆண்ட்ரியாவை வம்பு இழுப்பாராம்.
ஏனென்றால் நடிகை ஆண்ட்ரியாவுக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கும் கிட்டதட்ட ஒரே வயது. ஆதலால் வரலட்சுமி ஆண்ட்ரியாவிடம் எனது அப்பா கூட நீ ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கியா? என்று கிண்டலாக பேசுவாராம் .அதனை சமாளிக்க முடியாமல் ஆண்ட்ரியா தடுமாறுவாராம்.
இதையும் படியுங்களேன் - என்னை ஏன் யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்ராங்க.?! ஆண்ட்ரியா செல்லத்தை கெஞ்ச வைச்சிடீங்களே.!
இதனை அண்மையில் ஆண்ட்ரியா ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும் இது போன்ற பல தகவல்களை ஆண்ட்ரியா ஒளிவு மறைவில்லாமல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் அடித்ததாக, பிசாசு 2 வெளியாக உள்ளது. இப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.