
Cinema News
பாவாடை தாவணியில் பக்கா கிராமத்து பெண்ணாக மாறிய ஆண்ட்ரியா..!!
தமிழ் சினிமாவில் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பன்முகத்தன்மைகொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ம் சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலை பாடி தனது காந்த குரலால் இளசுகளை வீழ்த்தினார்.
தமிழ் தவிர இவர் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
தற்போது கவர்ச்சி பாதையிலிருந்து சற்று மாறி, பாவாடை, தாவணியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஒன்னு கவர்ச்சி காட்டுற, இல்லனா மொத்தமா இழுத்து மூடிக்கிறீங்க. உங்கள புரிஞ்சுக்கவே முடியலையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CZbFacYp9rR/