குளு குளு சீசனில் ஒரே சறுக்காய் சறுக்க வைத்த ஆண்ட்ரியா!..

by Rohini |
andrea_main
X

தமிழ் சினிமாவின் ஹிட் ஹீரோயின்களில் டாப் இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா.கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார்.

அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

andrea1

நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அழகிய நடிகை, சிறந்த பாடாகி, செம மாடர்ன் பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். இவரது திறமையான நடிப்பை கண்டு இயக்குனர் போட்டிப்போட்டுக் கொண்டு வாய்ப்புகள் கொடுப்பார்கள்.

மேலும் வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகச்சிறந்த திறமைசாலியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போஸ் கொடுத்த ஸ்டைலிஷ் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

andrea2

இந்த நிலையில் பனிச்சருக்கு பயிற்சியில் இருக்கும் படியான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இது தன்னுடைய முதல் அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.

முழு வீடியோவையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். https://www.instagram.com/p/CZ1Kis6p6cM/

Next Story